அதிவேக இணைய சேவைக்காக நாளை விண்ணில் செலுத்தப்படும் ‘ஜிசாட்-11’

  ஐஸ்வர்யா   | Last Modified : 04 Dec, 2018 07:57 pm
isro-s-heaviest-satellite-gsat-11-launch-on-ariane-5-rocket-on-tommorrow

அதிவேக இணைய சேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள அதி நவீன செயற்கைக்கோளான ஜிசாட்-11 செயற்கை கோள் நாளை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்ட நிலையில் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால் தற்போது செலுத்தப்படவுள்ளது. 

இந்தியாவில் அதிவேக இணையதள சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-11 என்ற செயற்கை கோளை இஸ்ரோ நிறுவனம் வடிவமைத்துள்ளது. மார்ச் மாதம் ஜிசாட்-6ஏ செயற்கைகோள் செலுத்தப்பட்டதால் இந்த செயற்கைகோள் ஏவுவது ஒத்தி வைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது. இந்நிலையில், பிரான்ஸ்கயானாவில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் நாளை அதிகாலை 2.07 மணி முதல் 3.23 மணிக்குள் ஜிசாட்-11 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஜிசாட் 11 செயற்கைக்கோள் 5854 கிலோ எடைக்கொண்டது. மேலும் இது ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படவில்லை மாறாக பிரான்ஸ் எடுத்து செல்லப்பட்டு பிரெஞ்சு கயனாவில் இருந்து ஏரைன் 5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படவிருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close