6 மணிநேரம் ஸ்பேஸ்வாக் செய்யும் ரஷ்ய விண்வெளி வீரர்கள்!

  Newstm Desk   | Last Modified : 10 Dec, 2018 06:34 pm
russian-cosmonauts-to-do-6-hour-spacewalk-to-examine-hole-in-hull

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்கள், சமீபத்தில் பாதிப்பாகி லீக் ஏற்பட்ட, சோயூஸ் MS-09 விண்கலத்தை ஆய்வு செய்வதற்காக 6 மணி நேரம் ஸ்பேஸ்வாக் செய்யவுள்ளனர். 

கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு சிறிய அழுத்த குறைவு ஏற்பட்டது. விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள சோயூஸ் MS-09 என்ற விண்கலத்தில் விழுந்த ஒரு ஓட்டையாலேயே, இந்த அழுத்த குறைபாடு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அதை சர்வதேச விண்வெளி வீரர்களை கொண்டு குழு, அடைத்தது. இதைத் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் புகைப்படங்கள் எடுத்து மேலும் ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டனர்.

இதன்படி, இன்று ரஷ்ய விண்வெளி வீரர்கள் ஒலெக் கோனோனென்கோ மற்றும் செர்கெய் ப்ரோகோபியேவ் ஆகிய இருவரும் சேர்ந்து, ஆறு மணி நேரம் விண்ணில் நடந்து, விண்கலத்தில் ஏற்பட்ட ஓட்டையை படம் பிடித்து, அது தொடர்பான மாதிரிகளை சேகரிக்க இருக்கின்றனர். அவற்றை வைத்து எப்படி ஓட்டை விழுந்தது, இனி அதை எப்படி தடுப்பது, என்று ஆய்வு செய்வதற்கு உதவியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

பாதிப்புக்குள்ளான அந்த சோயுஸ் MS-09 விண்கலத்திலின் மூலம், ரஷ்யாவின் ப்ரோகோபியேவ், அமெரிக்காவின் செரீனா சான்சலர் மற்றும் ஜெர்மனியின் அலெக்ஸ்சாண்டர் கெர்ஸ்ட் ஆகிய விண்வெளி வீரர்கள் வரும் 19ஆம் தேதி பூமிக்கு திரும்புகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close