விண்ணில் சீறிப் பாய்ந்தது இஸ்ரோவின் ஜிசாட் 7ஏ!

  Newstm Desk   | Last Modified : 19 Dec, 2018 04:31 pm
isro-launched-communication-satellite-gsat-7a-from-sriharikota-today

எல்லைப் பாதுகாப்பிற்கு உதவக்கூடிய ஜிசாட் -7ஏ செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி - எப் 11 ராக்கெட் உதவியுடன் இஸ்ரோ இன்று மாலை 4.10 மணிக்கு விண்ணில் செலுத்தியுள்ளது. 

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் செயற்கைகோள்களை அனுப்புவதில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக இன்று, ‘ஜிசாட்- 7ஏ’ தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி-எப் 11 ராக்கெட் உதவியுடன் இன்று மாலை 4.10 மணிக்கு விண்ணில் செலுத்தியது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சத்தீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. 

இது இந்திய எல்லைப் பகுதிகளில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்த உதவும். அதாவது எல்லையில் ராணுவத்திற்கு தேவையான தகவல்கள் மற்றும் விமானப்படைக்கு தேவையான தகவல்களை தரவல்லது. தரக்கூடியது. 2,250 கிலோ எடை கொண்ட ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளானது இந்தியாவின் 35வது தகவல் தொடர்பு செயற்கைக்கோளாகும். இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 8 ஆண்டுகளாகும்.  

இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கிரையோஜினிக் இன்ஜின் தான் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது முழுவதும் கியூ-பேண்ட் பயனாளர்களின் தொலைதொடர்புக்கு உதவும். 

ஜி.எஸ்.எல்.வி எப்-11 ராக்கெட்டானது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 13வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும். இது குறைந்தபட்சம் 170 கி.மீ தூரமும், அதிகபட்சம் 40,900 கி.மீ தூரமும் கொண்ட புவிவட்ட  பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close