அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

  Newstm Desk   | Last Modified : 23 Dec, 2018 11:11 am
agni-iv-missile-successfully-tested

அக்னி-4 ஏவுகணை இன்று ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 

அக்னி-4 ஏவுகணை இந்தியாவின் ஏவுகணை ரக வரிசைகளில் நான்காவது ஏவுகணை. இந்த ஏவுகணை முதல் முதலாக நவம்பர் 15, 2011அன்று ஒரிசாவின் வீலர் தீவில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இது 2,500 முதல் 3,500 கிமீ வரை தாக்கி அழிக்கக்கூடியது. மேலும் இது 1 டன் எடையுள்ள அணு ஆயுதத்தை எடுத்துச் செல்லக் கூடியது.  இதன் நீளம் 20மீ மற்றும் எடை 17 டன்கள்.

இந்நிலையில், இந்தியா தொடர்ந்து அக்னி ஏவுகணைகளை சோதனை செய்து வரும் நிலையில் இன்று ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் வைத்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close