சூரிய குடும்பத்திற்கு அப்பால் புதிய கோள் கண்டுபிடிப்பு

  விசேஷா   | Last Modified : 09 Jan, 2019 12:53 pm
new-planet-discovered

 

சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான ‛நாசா’ சூரிய குடும்பத்திற்கு அப்பால், புதிதாக மூன்றாவது கோள் இருப்பதை கண்டறிந்துள்ளது. இதற்கு, ‛ஹெச்.டி., 21749 பி’ என பெயரிடப்பட்டுள்ளது. 

விண்வெளியில் சூரிய குடும்பத்திற்கு அப்பால், புதிய கோள்கள் இருக்கின்றனவா என்பதை கண்டறிய, நாசா சார்பில், கடந்த ஆண்டு ஏப்ரலில், செயற்கைகோள் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த செயற்கைக்கோள், சூரிய குடும்பத்திற்கு அப்பால், பால்வெளி மண்டலத்தில், புதிதாக இரண்டு கோள்கள் இருப்பது கண்டறிந்துள்ளது.  மேலும், சிறிய நட்சத்திரம் ஒன்றை மையமாகக் கொண்டு, அதைச் சுற்றி வரும், மூன்றாது புதிய கோள் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இது, அந்த நட்சத்திரத்திலிருந்து, 53 ஒளி ஆண்டுகள் தொலைவில் சுற்றி வருகிறது. இந்த கோளின் மேற்பரப்பு, 300 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை உடையதாகவும், அதே அளவு குளிர் உடையதாகவும் தெரிய வந்துள்ளது. மிகவும் பிரகாசமாக காணப்படும் இந்தக் கோள் குறித்து மேலும் தகவல்களை பெற, நாசா விஞ்ஞானிகள் தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close