2021ல் விண்வெளிக்கு பெண் ஆராய்ச்சியாளர்களையும் அனுப்ப இஸ்ரோ திட்டம்!

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 06:04 am
isro-planning-to-send-women-to-space

விண்வெளிக்கு முதன்முதலாக மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு வரும் நிலையில், 2021ம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள முதல் பயணத்திலேயே விண்வெளி வீராங்கனைகளையும் அனுப்ப உள்ளதாக, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அடுத்த கட்ட விண்வெளித் திட்டங்கள் பற்றி இஸ்ரோ தலைவர் சிவன் பேசியபோது, 2021ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவோம், என தெரிவித்தார். அடுத்ததாக ஆளில்லாத இரண்டு ஜிஎஸ்எல்வி செயற்கைக்கோள் திட்டங்களை இஸ்ரோ அனுப்பவுள்ள நிலையில், அதற்கு பிறகு 'ககன்யான்' எனப் பெயரிடப்பட்டுள்ள திட்டத்தின் மூலம், இந்தியர்களை விண்ணுக்கு அனுப்பவுள்ளதாக தெரிவித்தார். 

டிசம்பர் 2021ல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பெண் விண்வெளி ஆராய்ச்சியாளர்களையும் விண்ணுக்கு அனுப்ப ஆர்வமாக உள்ளதாக அவர் தெரிவித்தார். "2021ல் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் விண்வெளி வீராங்கனைகளும் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்" என்றார் சிவன்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close