தமிழக மாணவர் உருவாக்கிய 'கலாம்சாட்' இன்று விண்ணில் பாய்கிறது!

  Newstm Desk   | Last Modified : 24 Jan, 2019 12:37 pm
isro-to-launch-first-student-made-satellite-from-sriharikota-today

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி - சி44 ராக்கெட் மூலம் மாணவர்கள் உருவாக்கிய 'கலாம் சாட்' மற்றும் 'மைக்ரோசாட் - ஆர்' ஆகிய இரண்டு செயற்கைகோள்கள் இன்று இரவு விண்ணில் செலுத்தப்படவுள்ளன. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவினம்(இஸ்ரோ) தொடர்ந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் 3டி கேமராக்கள், லேசர் கருவிகள் உள்ளிட்ட புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய ராக்கெட் மூலம் மைக்ரோசாட் - ஆர், கலாம் சாட் ஆகிய 2 செயற்கைக் கோள்கள் இன்று இரவு விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

மைக்ரோசாட் - ஆர் செயற்கைகோள் புவியை கண்காணிப்பதற்காக, முக்கியாக எல்லை பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது 690 கிலோ எடை கொண்டது. 

இன்று (ஜன.24) இரவு 11.40 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி - சி44 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான கவுன்ட்-டவுன் நேற்று இரவு தொடங்கியது.

இத்துடன் தமிழக மாணவர்கள் தயார் செய்துள்ள சிறிய நானோ வகை ‘கலாம்சாட்’ என்ற செயற்கைக் கோளும் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. இது தொலைத்தொடர்பு செயற்கைக் கோள் வகையாகும். அதேபோன்று இந்த செயற்கைகோள் வெறும் 2 மாதங்களே ஆயுட்காலம் கொண்டதாகும். பி.எஸ்- 4 இன்ஜின் மூலம் ‘கலாம்சாட்’ விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close