கலாம்சாட் செயற்கைகோள்: நாசாவை விஞ்சிய இஸ்ரோ!

  Newstm Desk   | Last Modified : 25 Jan, 2019 09:25 am
isro-successfully-launches-world-s-lightest-satellite-made-by-students

முற்றிலும் மாணவர்களால் உருவாக்கப்பட்ட உலகிலேயே மிக குறைந்த எடையுடைய 'கலாம் சாட்' மற்றும் இந்திய பாதுகாப்பு  ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்துக்கான 'மைக்ரோசாட் - ஆர்' ஆகிய இரு செயற்கைகோள்களையும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நேற்று நள்ளிரவு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவாண் ஆய்வு மையத்திலிருந்து, பிஎஸ்எல்வி -சி44 ராக்கெட் மூலம் இரண்டு செயற்கோள்களும் நேற்றிரவு சரியாக 11:37 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டன.

ராக்கெட் ஏவுப்பட்ட 14 -வது நிமிடத்தில் மைக்ரோசாட் -ஆர் செயற்கோள் 277 கி.மீ. தொலைவில் புவிவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

700 கிலோகிராம் எடைக்கொண்ட இச்செயற்கோள், நாட்டின் பாதுகாப்புத் தேவைகளை மேம்படுத்த உதவும். பாதுகாப்பு ஆராய்ச்சிகளுக்கு தேவையான புவியின் பல்வேறுபட்ட புகைப்படங்களை இச்செயற்கோள் அனுப்பும். 

கலாம்சாட்: மைக்ரோசாட்-ஆர்  செயற்கைகோளுடன், முற்றிலும் மாணவர்களால் உருவாக்கப்பட்ட உலகிலேயே மிக குறைவான எடைகொண்ட (1.26 கிலோகிராம்) கலாம்சாட் செயற்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது.

ராக்கெட் செலுத்தப்பட்ட 103-வது நிமிடத்தில்,  கலாம்சாட் தொலையுணர்வு செயற்கோள், 450 கிலோமீட்டர் தொலைவில் புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

சென்னையிலிருந்து செயல்பட்டு வரும் "ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா"  எனும் அமைப்பைச் சேர்ந்த மாணவர் குழுவின் ஆறு மாத உழைப்பில் இச்செயற்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. 12 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இச்செயற்கைகோளின் ஆயுள்காலம் 2 மாதங்களாகும்.

பிஎஸ்எல்வி -சி44 ராக்கெட் 44.4 மீட்டர் நீளமும், 260 டன் எடையும் கொண்டதாகும்.

நாசாவை விஞ்சிய இஸ்ரோ: உலகிலேயே மிக குறைந்த எடையுடைய (64 கிராம்)  செயற்கைகோளான "குளோப் ஜாமூனை",  அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (நாசா) கடந்த 2017 -இல் விண்ணில் செலுத்தியது. ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் வாழ்த்து: இந்திய விண்வெளி ஆய்வு பயணத்தில் புதிய மைல்கல்லான "கலாம்சாட்" செயற்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு காரணமான மாணவர்களை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரோ தலைவர் கே.சிவன் பாராட்டி, வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

newstm.in
 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close