விண்வெளி ஆய்வில் மற்றொரு மைல்கல்...கருந்துளை புகைப்படங்கள் வெளியீடு !

  ஸ்ரீதர்   | Last Modified : 10 Apr, 2019 07:34 pm
black-hole-photograph-to-be-released-by-event-horizon-at-6-30pm-today

மனிதக்குலத்தின் விண்வெளி தேடலில் ஒரு முக்கிய சாதனையாக, விண்வெளி மண்டலத்தில் உள்ள இரு கருந்துளைகளின் புகைப்படங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. வாஷிங்டன், டோக்கியோ, ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் ஒரே நேரத்தில், இப்புகைப்படங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

ஈவென்ட் ஹாரிசன் டெலஸ்கோப் விஞ்ஞானிகள் ஒன்று சேர்ந்து கருந்துளை பற்றி நடத்திய ஆய்வில், முதல்முறையாக இரண்டு கருந்துளைகளின் புகைப்படங்களைப் படம் பிடித்துள்ளனர். இந்த கருந்துளைகளின் புகைப்படங்கள் இன்று வெளியிட்டுள்ளன.

ஈவென்ட் ஹாரிசன் டெலஸ்கோப் விஞ்ஞானிகள் எட்டு ரேடியோ டெலஸ்கோப்களை பயன்படுத்தி இரண்டு கருந்துளைகளைக் கண்டுபிடித்துள்ளனர். அதில் முதல் கருந்துளையான சாகிட்டாரிஸ் ஏ (Sagittarius A) சுமார் 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் மிகப்பெரிய கருந்துளை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், இரண்டாவது கருந்துளை விர்கோ, விண்மீன் மண்டலத்தில் மிகப்பெரிய நீளமான M87 கோள்களுக்கு மையத்தில் அமைத்துள்ளதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த இரண்டு கருந்துளைகளின் ஈர்ப்பு சக்திகள் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருப்பதாகவும், சூரியன் போல் உள்ள நட்சத்திரங்களை வெறும் 48 மணி நேரத்தில் தன்வசம் ஈர்த்து இவை விழுங்கிவிடும் வல்லமை கொண்டவை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close