சந்திரனில் தண்ணீா்? நாசா கண்டுபிடிப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 16 Apr, 2019 03:44 pm
meteoroid-strikes-eject-precious-water-from-moon-nasa

இந்த நாள் வரை நிலவு ஒரு வறண்ட துணைக்கோள் எனவும், நிலவில் தண்ணீர் பணிப்படிவத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துவந்தனர்.

ஆனால் நாசாவின் லூனார் ஆர்பிட்டர் ஆய்வின் படி, நிலவின் மேற்பரப்பில் தற்பொழுது தண்ணீர் எப்படி உருவாகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நிலவின் மீது அவ்வப்போது ஏற்படும் விண்கல் மழைக்குப் பிறகு நிலவில் தண்ணீர் உருவாகி மறைகிறதென்று நாசா அறிவித்துள்ளது.

நிலவில் தண்ணீர் எவ்வாறு உருவாகிறது, என்பது குறித்து ஆராய்ந்து அறிய நாசா செயற்கைக்கோள் ஒன்றை அனுப்பி அக்டோபர் 2013 முதல் ஏப்ரல் 2014 வரை நிலவின் சுற்றுப்பாதையைச் சுற்றி வரச் செய்து, முழு நிலவின் மேற்பரப்பு விபரங்களைச் சேகரித்துள்ளது.

இதன்படி சந்திரனில் ஏற்பட்ட விண்கல் மழையின் போது, நீர் உருவாவதற்கு போதுமான அளவு நீராவி வெளியாகியுள்ளதை நாசா கண்டறிந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. பின்னர் இந்த விண்கல் மழை முடிந்ததும் நிலவில் தோன்றிய H2O அல்லது OH மறைந்துவிட்டதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close