இன்று சந்திர கிரகணம்: இந்தியாவில் எப்போது தெரியும்?

  கிரிதரன்   | Last Modified : 16 Jul, 2019 03:31 pm
what-time-chandra-grahan-will-be-visible-in-india

இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்,  இந்திய நேரப்படி (ஐஎஸ்டி) இன்று நள்ளிரவு 12:13 மணிக்கு ஆரம்பிக்கும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் சுமார் 5 மணி நேரம் 34 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணத்தை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பெரும்பாலான பகுதிகளில் 2 மணி நேரம் 58 நிமிடங்களுக்கு பகுதி அளவாக பொதுமக்கள் காணலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளிலும் இக்கிரகணத்தை காணலாம். விண்ணில் நடைபெறும் வியக்கத்தக்க நிகழ்வுகளில் ஒன்றான சந்திர கிரகணம், இதற்கடுத்து, 2021 நவம்பர் மாதம் தான் நிகழும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் பூமி வரும்போது, பூமி, சூரியனை  பகுதி அளவாகவோ, முழுமையாகவோ மறைக்கும். இது நிலவில் எதிரொலிக்கும் அற்புத நிகழ்வு தான் சந்திர கிரகணமாகும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close