நிலவில் இறங்க நாம் கடக்க வேண்டிய தூரம் இன்னம் உள்ளது என்று உணர்த்திய சந்திரயான் லேண்டர் விக்ரம்

  Dr.தர்மசேனன்   | Last Modified : 07 Sep, 2019 09:14 am
long-way-to-go-to-land-in-moon

நிலவில் இறங்க நாம் கடக்க வேண்டிய தூரம் இன்னம் உள்ளது என்று உணர்த்திய சந்திரயான் லேண்டர் விக்ரம்.

சந்திரயான் விண்கலத்தில் அனுப்பப்பட்ட நிலவில் இறங்கும் வாகனமான விக்ரம் எதிர்பார்த்தபடி நிலப்பரப்பில் சுமூகமாக இறங்கவில்லை.

அது இறங்குவதற்குத் தேவையான வேகம் குறையாமல் தேவைக்கும் அதிகமான வேகத்தில் இறங்கியதில் விக்ரம் லேண்டர் சேதமடைந்திருக்க வேண்டுமென்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.

விக்ரம் வாகனத்துடனான செய்தித் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் சந்திரயானில் இருந்து பிரிந்து சென்று நிலவை சுற்றி வருவதற்கென்று அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் செயல்பாட்டில் உள்ளது.

அது இன்னமும் ஓராண்டிற்குக் குறையாமல் நிலவைச் சுற்றி வந்து அது திரட்டும் தகவல்களை பூமிக்கு அனுப்பும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close