'சந்திராயன் 2' புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்!

  அபிநயா   | Last Modified : 20 Sep, 2019 03:13 pm
nasa-releases-images-of-chandrayaan-2

'சந்திராயன் 2' வின் விக்ரம் லாண்டரை தேடி பயணித்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் ஆர்பிட்டர், அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

சந்திராயன் 2 வின் விண்வெளிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், அதனை தேடி சென்ற நாசாவின் லூனார் ரிக்கனைஸன்ஸ் ஆர்பிட்டர், சந்திரயானின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

லூனார் ரிக்கனைஸன்ஸ் ஆர்பிட்டர் அனுப்பிய புகைப்படங்களில், விக்ரம் லாண்டர் காணப்படாததால், அது கேமராவிற்கு எதிர் பகுதியில் தரையிறங்கி இருக்கலாம் என நாசா கூறியுள்ளது.

செப் 21., ஆம் தேதிக்கு பின்னர், சந்திரன் மிகவும் குளிர்ச்சியடந்து காணப்படும் என்பதால், விக்ரமை இயக்குவது சாத்தியமல்ல என்னும் நிலையில், விக்ரமின் ஆயுட்காலம் இன்னும் இரண்டு நாட்களே மீதமுள்ளது. 

இந்த இரு நாட்களுக்குள் விக்ரமை கண்டுப்பிடிக்க முடியாமல் போனால், பின்னர் விக்ரமை தொடர்புக் கொள்ள முயற்சிப்பதில் எந்த பயனும் இல்லை. இதற்கிடையில் நிம்மதி தரும் ஒரே விஷயம் சந்திராயன் 2 ன் சுற்று பாதை பாதிப்படையவில்லை என்பதே என இஸ்ரோ வருத்தத்துடன் தெரிவித்துள்ளது. 

இஸ்ரோவின் இந்த முயற்சிக்கு, எல்லா வகையிலும் உதவுவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான  நாசா நம்பிக்கை அளித்துள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close