அமெரிக்க நானோ செயற்கை கோள்களுடன் ஏவப்படும் இஸ்ரோவின் கார்டோசாட் - 3!!!

  அபிநயா   | Last Modified : 19 Nov, 2019 08:19 pm
isro-satellite-launch-isro-s-cartosat-3-launching-along-with-13-us-nano-satellites-on-november-25

இஸ்ரோவின் செயற்கைகோளான கார்டோசாட் - 3, அமெரிக்காவின் 13 நானோ செயற்கை கோள்களுடன் ஏவப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, பூமியின் கண்காணிப்பிற்காக 3 செயற்கை கோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் ஒன்று வரும் நவம்பர் 25ஆம் தேதியும், மற்ற இரண்டும் டிசம்பர் மாதத்திலும் ஏவப்படவுள்ளாத குறிப்பிடப்பட்டிருந்தது.

இஸ்ரோவினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மூன்று போலார் செயற்கை கோள்களும் இந்திய எல்லை பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அமெரிக்காவின் நானோ மற்றும் மைக்ரோ செயற்கை கோள்களையும் இவை கொண்டு செல்ல உள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. 

வரும் நவம்பர் 25ஆம் தேதியன்று காலை 10மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படவுள்ள இந்த செயற்கை கோள், முக்கிய பேலோடான கார்டோசாட்-3 மற்றும் அமெரிக்காவின் 13 நானோ சாட்டிலைட்டுகளையும் ஏற்றிச் செல்ல உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் நியூஸ்பேஸ் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. இந்த கார்டோசாட்-3, அதன் முன்னோடியான கார்டோசாட்-2ஐ விட மிகுந்த சக்தி வாய்ந்ததாகவும், மேம்பட்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு பொருட்களையும் வேறுபடுத்தி பிரித்து அறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கார்டோசாட்-3, மல்டி ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைபர் ஸ்பெக்ட்ரல் திறன்களையும் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close