வாட்ஸ் ஆப் '7 நிமிட டெலிட்' வசதி பாதுகாப்பில் சந்தேகம்

  Saravanan   | Last Modified : 19 Feb, 2018 04:10 pm

வாட்ஸ் ஆப்பில் பகிரப்படும் ஒரு தகவலை 7 நிமிடங்களில் டெலிட் செய்துவிட்டாலும் கூட, அந்தத் தகவலைப் பெற்றுக்கொண்டோரின் பார்வையில் பட்டுவிட சாத்தியம் உண்டு என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு தகவல் தவறான நபருக்கோ அல்லது குழுவுக்கோ வாட்ஸ் ஆப்பில் பகிரப்படுகிறது. அதை உடனடியாக இரு தரப்பும் பார்க்காத வகையில் அழித்திடும் வசதி உள்ளது. இந்த வசதியை ஏழு நிமிடத்துக்குள் பயன்படுத்த வேண்டும். 

ஆனால், அவ்வாறு அனுப்பப்படும் தகவலுக்கு உடனடியாக எவரேனும் பதில் அனுப்பிவிட்டால், ஒரிஜினல் மெசேஜை டெலிட் செய்தால் கூட, ரிப்ளையில் அந்த ஒரிஜினல் மெசேஜின் இரண்டு வரிகள் தெரியும். அதேபோல், தவறுதலாக போட்டோ அனுப்பிவிட்டு, ஏழு நிமிடத்துக்குள் டெலிட் செய்த இடைவெளியில் அதில் எவரேனும் ரிப்ளை செய்திருந்தால், ஒரிஜினல் போட்டோ டெலிட் ஆகுமே தவிர, ரிப்ளையில் அந்தப் போட்டோவின் குட்டி வடிவம் அப்படியே இருக்கும்.

வாட்ஸ் ஆப்பின் டெலிட் வசதியில் உள்ள குளறுபடிகள் குறித்த ஆய்வுகளை அடங்கிய செய்திக் கட்டுரையை 'தி நெக்ஸ்ட் வெப்' எனும் டெக்னாலஜி பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், வாட்ஸ் ஆப்பின் டெலிட் வசதியின் பாதுகாப்புத் தன்மை மீது சந்தேகங்கள் எழுப்பப்படுள்ளன.

இந்த 7 நிமிட டெலிட் ஆப்ஷனை வாட்ஸ் ஆப் நிறுவனம் கச்சிதமாக கட்டமைக்கவில்லை எனும் விதமாக குறைகூறும் அந்தச் செய்திக் கட்டுரையில், டெலிட் ஆன மெசேஜ்களை ஆண்ட்ராய்டு நோட்டிஃபிகேஷன் ஹிஸ்டரியில் இருந்து மீட்கவும் வழி உள்ளதாக, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப எழுத்தாளர் ஒருவரை மேற்கோள் காட்டி குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவலை ஒருவருக்கோ அல்லது குழுவுக்கோ தவறாக அனுப்பிவிட்டால் அதை திரும்பப் பெறவோ அல்லது அழிக்கவோ இயலாது என்பது ஒரு பெரிய குறையாக இருந்தது. 

இந்தக் குறையைப் போக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் எழுந்த கோரிக்கையை வாட்ஸ் ஆப் கடந்த ஆண்டு நிறைவேற்றியது. அதன்படி, தவறுதலாக ஒருவருக்கு மெசேஜை அனுப்பிவிட்டால் 7 நிமிடங்களுக்குள் அதை உடனே அழித்துவிடலாம். இரு தரப்புக்கும் அழிக்கும் வகையில் ஆப்ஷன் புகுத்தப்பட்டது. இந்த வசதியின்படி, ஒரு தகவலை தவறாக மற்றவர்களுக்கு அனுப்பிவிட்டால், "டெலிட் பார் எவ்ரிஓன்' என்ற பட்டன் மூலம் அழிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில், தற்போது கண்டறியப்பட்ட டெலிட் வசதி குளறுபடி வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோருக்கு மேலும் கவனத்துடன் செயல்பட எச்சரிக்கையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close