சொர்க்கத்தை கண்முன் காட்டிய நாசா!

  ஐஸ்வர்யா   | Last Modified : 24 Feb, 2018 08:47 am


மனித வாழ்வில் அடுத்தவனுக்கு கிடைத்தது நமக்கு கிடைக்கவில்லை என பொறாமை படாத ஒரே நிகழ்வு மரணம். மரணத்திற்கு பின் தான் சொர்க்கத்தை காணலாம் என பெரியவர்கள் சொல்வதுண்டு. தவறு செய்தால் நரகம். நன்மை செய்தால் சொர்க்கம் என சொல்லி சொல்லி சிறு வயதில் இருந்து குழந்தைகளை வளர்ப்பதுண்டு. ஆனால் சொர்க்கத்தை பார்த்துவந்து அனுபவத்தை சொன்னவர்கள் யாரும் இல்லை. ஆனால் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அண்மையில் சொர்க்கத்தின் புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நம் ஒவ்வொருவரின் ஆசையும் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்பதுதான். சிலருக்கு சொர்க்கத்தை கண்ணால் பார்த்தாவது விட வேண்டும் என்ற ஆசை இருக்கும். சொர்க்கத்தை பற்றி இலக்கிய கதைகளில் கூறியிருந்தாலும் அறிவியல் உலகில் ஆதாரப்பூர்வ கருத்துகள் இல்லை என்றே கூறலாம். 


கடந்த ஆண்டு பூமி தினத்தினை முன்னிட்டு சொர்க்கத்தின் புகைப்படங்கள் என பூமியின் மேற்பரப்பில் இருக்கும் அழகான அறிய புகைப்படங்களை நாசாவின் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் தொலைநோக்கி படம்பிடித்துள்ளது. பூமியில் இருந்து 17,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் PSR B1509-58 என்ற நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளது.

வினோதமாக அமைந்துள்ள இந்த நட்சத்திரத்தை ஆய்வாளர்கள் ’ஹான்ட் ஆஃப் காட்’ (Hand of God) என அழைக்கின்றனர். ’ஹான்ட் ஆஃப் காட்’ஐ சொர்க்கம் என்கின்றனர் நாசா விண்வெளியாளர்கள். நியூட்ரான் நட்சத்திரத்தில் ‘சூப்பர் நோவா’ நிகழ்வு நடைபெறும் போது வீரியமுள்ள அலைக்கற்றைகளும், அதிக ஆற்றலும் கொண்ட வெளிச்சம் உண்டாகும் என கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பேராசிரியர் கூறுகிறார். 

‘சூப்பர் நோவா’ என்பது விண்வெளியில் நட்சத்திரமானது பெரும் வெளிச்சத்துடன் வெடித்துச் சிதறும் வானியல் நிகழ்வு என தெரிவிக்கின்றனர் விண்வெளி ஆய்வாளர்கள்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.