• தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பிரபல வணிக வளாகம் மூடல்
  • காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
  • பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!
  • ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்!

நிலவில் வீடு கட்டும் இஸ்ரோ!!

  ஐஸ்வர்யா   | Last Modified : 27 Feb, 2018 10:50 am


இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, செயற்கைக்கோள்களில் ரோவர், ரோபோக்களையும், 3D பிரிண்டர்கள் போன்ற கருவிகளை நிலவிற்கு அனுப்பி, விண்வெளி வீரர்கள் தங்குவதற்கு ஏற்றாற்போல் குகை வீட்டை அமைக்க திட்டமிட்டுள்ளது.


நிலவில் அமைக்கப்படும் இந்த குகைகள் ஆய்வுக்கூடங்களாக பயன்படுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆய்வுக்கூடத்தில் அமர்ந்து பணியாற்ற அனைத்து வசதிகளும் குகைக்குள் இருக்கும். நிலவில் உள்ள மண்ணை பயன்படுத்தியே இந்த குகை அமைக்கப்படுவதாகவும், விண்வெளி வீரர்களுக்கு இதுபோன்ற இடம் பாதுகாப்பை தரும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

இஸ்ரோ நிறுவனம், அடுத்த மாதம் சந்திரயான் -2 திட்டத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இது நிலவு ஆராய்ச்சியில் பெரிய மைல்கல்லாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சந்திரயான்-2 விண்கலம் மட்டும் இல்லாமல் சிறிய அளவில் ரோபோ போன்ற 'ரோவர்' ஒன்று அனுப்பப்பட இருக்கிறது. சந்திரயான்-2 ரோவர் நிலவின் மேற்பரப்பில் இறக்கப்பட்டு அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது. இது குகையை கட்டும் முயற்சியிலும் களமிறங்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

சந்திரயான் -2 உருவாக்க மொத்தமாக 800 கோடி வரை செலவு ஆகி இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close