கொலையாளியாகும் ரோபோக்கள்! - கூகுள் முன்னாள் சி.இ.ஓ எச்சரிக்கை

  ஐஸ்வர்யா   | Last Modified : 04 Mar, 2018 01:03 pm


கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி எரிக் ஸ்மித் இன்னும் சில நாட்களில் ரோபாக்கள் மனிதர்களைக் கொல்லும் என தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ரோபோடிக் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி எரிக் ஸ்மித் பங்கேற்றார். அப்போது பார்வையாளர்கள் அவரிடம் கேள்விகளை எழுப்பினர்.

இயந்திரங்களின் வளர்ச்சி எழுச்சி கண்டுவிட்டது, மனிதர்கள் பயப்பட வேண்டிய சூழலும் வந்துவிட்டது. இதனால் வருங்காலத்தில் ரோபோக்கள் மனிதர்களைக் கொல்லுமா? என்று ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த எரிக், "சினிமாவில் ரோபோக்கள் கொல்வது போல வரும் காட்சிகளைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்வியை எல்லோரும் கேட்கிறார்கள், இதைப் பற்றி இன்னும் 10 முதல் 20 வருடங்களுக்கு பின் கவலைப்படலாம். இப்போதைக்கு இதைப் ற்றி கவலை பட தேவையில்லை. ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜன்ஸ் (AI) தொழில்நுட்பத்தின் நன்மைகள் எவ்வளவு பெரிதானவையோ அதேபோன்று தான் ரோபோக்களின் வளர்ச்சி குறைபாடும் மிக வீரியமானது.

மனிதனைப் போல செயல்படும் ரோபோக்களை தயாரிக்கும்போது, அவற்றின் செயல்பாடுகள் பற்றி மிகவும் தீவிரமாக கண்காணிக்க வேண்டியது அவசியம். முக்கியமாக ஒன்றை சொல்ல நினைக்கிறேன். இந்த தொழில்நுட்பங்களில் சில பிழைகளும் உள்ளன. என, மனித வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முக்கிய முடிவுகள் எடுக்கும் விஷயங்கள் ரோபோக்கள் பயன்படுத்தக் கூடாது" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close