50வது செயற்கைக்கோளை ஏவியது ஸ்பேஸ் எக்ஸ்

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Mar, 2018 02:18 pm


அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது 50வது பால்கன் வகை ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது.

ஸ்பெயின் நாட்டுக்குச் சொந்தமான 6 டன் எடை கொண்ட தொலைத் தொடர்பு செயற்கைக் கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, புவிக்கு இணையான சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தியது. கடந்த 18 மாதங்களில் வணிக ரீதியாக ராக்கெட்டை அனுப்பியதில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. மேலும் அட்லஸ் 5 என்ற நிறுவனத்தை விட, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மிகக் குறைந்த செலவில் ராக்கெட்டை செலுத்தி வருவதால் வெற்றி சாத்தியமானது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close