• ராகுல் இல்லத்திற்கு வெளியே சிறப்பு யாக பூஜை
  • ராஜஸ்தானில் பா.ஜ.க முன்னிலை
  • 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
  • விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
  • ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா!

செவ்வாய் கிரகத்தில் பறக்கவிருக்கும் நாசாவின் ட்ரோன்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 16 Mar, 2018 05:53 pm


செவ்வாய் கிரகத்தில் உள்ள காலநிலை தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக ட்ரோன் வகை விமானத்தினை செவ்வாய் கிரகத்தில் பறக்கவிடுவதற்கான முயற்சியில் நாசா களமிறங்கியுள்ளது. 

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கான குடியிருப்புகளை உருவாக்க நாசாவும், தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. நாசாவின் ‘இன்சைட்’ (Interior Exploration using Seismic Investigations, Geodesy and Heat Transport) திட்டம் மூலம் பூமியிலிருந்து சிவப்புக் கிரகமான செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை ராக்கெட் மூலம் அனுப்பும் முயற்சியில் நாசா ஈடுபட்டுள்ளது.


இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் உள்ள காலநிலை தொடர்பான தகவல்களை ஆய்வு செய்வதற்காக ட்ரோன் வகை விமானத்தினை செவ்வாய் கிரகத்தில் பறக்கவிடுவதற்கு நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காகக் குறைந்த எடைகொண்ட ட்ரோன் விமானத்தினை சோதனை செய்யும் முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். 

வருகிற 2020ம் ஆண்டில் புதிய ரோவர் ஒன்றைச் சுமந்துகொண்டு செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் ஒன்றை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்துடன், ட்ரோன் விமானத்தினையும் அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் வளிமண்டல அழுத்தம் பூமியின் வளிமண்டல அழுத்தத்தை விடக் குறைவாகவே உள்ளது. மேலும் புவியீர்ப்பு சக்தி செவ்வாயில் குறைவு. இதனால் குறைந்த எடைக்கொண்ட ட்ரோன் செவ்வாயில் பறக்குமா? என்பது நாசா விஞ்ஞானிகளின் மத்தியில் கேள்வி குறியாகவே உள்ளது.


நாசாவின் செவ்வாய் ஆய்வு மையத்தின் இயக்குநரான ஜிம் வாட்சின் இதுகுறித்துக் கூறுகையில், ’கடந்த மாதம் ஹெலிகாப்டர் ஒன்றை செவ்வாயின் வளிமண்டல அழுத்தம் கொண்ட சோதனை அறையில் 86 நிமிடங்கள் பறக்கவிடப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் ட்ரோன் விமானமானது 1.8 கிலோகிராம் எடையுள்ளதாக உருவாக்கப்பட்டுள்ளது. 1,000 அடி உயரம் வரை பறக்கக்கூடியது. ட்ரோனில் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது, இதனை சோலார் பேனல்கள் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம். 

சோதனை முயற்சியில் உள்ள இந்த ட்ரோன்களில் ஏவோனிக்ஸ் மற்றும் சென்சார்ஸ் ஆகிய வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் 2020ம் ஆண்டு ஜூலை மாதம் யுனைட்டட் ஏர்லைன்ஸ் அலையன்ஸ் அட்லஸ் 5 ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும், புதிய ரோவர் விண்கலத்துடன் ட்ரோன் விமானமும் பறக்கும்’ என்றார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.