ஏப்ரல் 7ல் டெல்லியில் நிலநடுக்கம் ஏற்படுமா? - நாசா விளக்கம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 22 Mar, 2018 07:53 pm


டெல்லியில் 9.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளதாக வாட்ஸ் அப்பில் தகவல்கள் வைரலாகி வருகின்றன. டெல்லியில் இந்த நிகழ்வு ஏற்படுமா என்று நாசா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

பொதுவாக 7.5 க்கும் குறைவான ரிக்டர் அளவு பதிவாகும் நிலநடுக்கங்கள் பேரழிவை உருவாக்குவதில்லை. ஆனால், ரிக்டரில் 7.5 க்கும் அதிகமான நிலநடுக்கங்களே பேரழிவையும், ஆழிப்பேரலை உள்ளிட்ட இதர பாதிப்புகளையும் ஏற்படுத்தும். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் 9.1 அல்லது 9.2 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலநடுக்கம் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி முதல்  15-ம் தேதி ஆகிய  இடைப்பட்ட நாளில் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


சோஷியல் மீடியாவில் பரவும் அந்த பதிவில்,  "உலக வரலாற்றில் இது 2-வது முறையாக குர்கான் பகுதியை மையமாக கொண்டு டெல்லியில் கடுமையான நிலநடுக்கம் நிகழும் என கூறப்பட்டுள்ளது. இந்த மாபெரும் பேரழிவான இந்த நிலநடுக்கம் மட்டும் அரங்கேறினால் வடமாநிலங்களான ஹரியானா, பஞ்சாப், ஜம்மு & காஷ்மீர், ராஜஸ்தான், பீகார் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இந்த பாதிப்பினால் தமிழ்நாட்டிலும் பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதை அமெரிக்காவின் நாசாவே தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு, www.nasaalert.com என்ற இணையத்துக்கு வாருங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனால் வட இந்தியாவில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பலரும் பயத்தில் உறைந்துபோயுள்ளனர். இப்படி ஒரு பேரழிவு நிகழுமா? இந்த தகவல்கள் உண்மை தானா? என நாசாவிடம் கேட்டபோது, "இந்த செய்தி முற்றிலும் பொய்யானது. தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு பரப்பப்பட்டு வருகின்றனர். நிலநடுக்கம் இந்த தேதியில் தான் நிகழும் என்பது விஞ்ஞானிகள் கூட கணிக்க முடியாது. வாட்ஸப்பில் பரப்பப்படும் இணையதள முகவரியும் நாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் இல்லை" என தெரிவித்துள்ளது.

இன்றைக்கு எதற்கு எடுத்தாலும் நாசா  பெயரில் தகவல் பரப்பப்படுகிறது. அதுவும் அழிவு, ஆபத்து என்றால் கொஞ்சம் கூட யோசிக்காமல் நாசா சொல்லியது என்றே தவறான தகவலை பரப்புகின்றனர். இதனால், அப்பாவி பொது மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close