3D பிரிண்டிங் தொழில்நுட்பத்துடன் வீடு கட்டும் ரோபோ

  ஐஸ்வர்யா   | Last Modified : 13 Apr, 2018 09:05 pm


பிரான்ஸ் நாட்டை  சேர்ந்த  பல்கலைக்கழக குழு ஒன்று பசுமை வீட்டை கட்டும் ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

 பிரான்ஸ் நாட்டில் உள்ள  நான்டஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பெனோய்ட் ஃபூரிட் தலைமையிலான மாணவர்கள் இந்த 3டி ரோபோ பிரிண்டிங் இயந்திரத்தை உருவாக்கி அதில் வீடு கட்டியுள்ளனர். இவை பிரான்ஸ் மக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகம் செய்யப்படவுள்ளது. உலகில்  3டி தொழில்நுட்பத்துடன் கட்டப்படும் முதல் ரோபோ வீடு இதுவே!


கணினியில் உருவாக்கப்படும் வரைபடத்தின் வடிவங்களின் படி வீட்டின் சுவர்களை  தத்ரூபமாக ரோபோக்கள் உருவாக்கியுள்ளது. 3டி ரோபோ பிரிண்டிங் இயந்திரத்தில் உள்ள பெரிய சிரிஞ்ச் போன்ற அமைப்பு வேகமாக சுவர்களை வடிவமைக்கிறது. பாலிமர் பொருளால் உள் சுவர் மற்றும் வெளி சுவரை இந்த ரோபோ உருவாக்குகிறது. பின்னர், இரண்டுக்கும் நடுவே, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிமென்ட் கலவை குழாய் மூலம் செலுத்தப்படுகிறது. வீடு கட்டும் போது பல பொருட்கள்  வீணாக்கப்படுவது இம்முறையால்  தவிர்க்கப்படுகிறது.  வெறும் 18 நாட்களில் கான்கிரிட் வீடுகளை ரோபோக்கள் கட்டி  எழுப்பியுள்ளன.


ரோபோக்களால் கட்டப்படும் இந்த வகை வீடுகள்  மிகவும் பாதுகாப்பாக உருவாக்கப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் 100 ஆண்டுகளுக்கு இந்த வீடுகள்  உறுதியாக இருக்கும்  என கூறப்படுகிறது. குளிர், வெயில், மழை  என பல்வேறு காலநிலையை தாங்ககூடிய  விதத்தில் இந்த வகையான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. முதல் கட்டமாக ஐந்து அறைகள் கொண்ட வீடு கட்டப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம், நான்டஸ் பகுதியில் அரசு குடியிருப்பு கோரியிருந்த ஒரு குடும்பத்துக்கு இந்த வீடு வழங்கப்படுமாம்!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.