30 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட ராட்சத மனித ரோபோ

  ஐஸ்வர்யா   | Last Modified : 14 Apr, 2018 03:37 pm


ஜப்பானைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் ஹாலிவுட் திரைப்படங்களில் வருவது போல 30 அடி உயரத்தில் பிரமாண்டமான மனித ரோபோவை உருவாக்கியுள்ளார். 

ஜப்பானின் குன்மா மாகாணத்தில் உள்ள ஷின்டோ கிராமத்தைச் சேர்ந்த மசாகி நகுமோமார் 30 அடி உயரத்தில் ராட்சத மனித ரோபோவை உருவாக்கியுள்ளார். 7 டன் எடையுள்ள இந்த மனித வடிவ ரோபோ, கனரக மூலப் பொருட்களை அசால்டாக தூக்கி செல்லுமாம். வாகனங்களில் மனிதர்கள் அமர்ந்து இயக்குவது போலவே, இந்த ரோபோவையும் இயக்க முடியுமாம். தலையை அன்னாந்து பார்க்கும் அளவிற்கு பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த ரோபோவின் மேல் ஏறி அமர்ந்து அதனை இயக்க லிப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 


இதுகுறித்து மசாகி நகுமோமார் கூறுகையில், வேளாண் இயந்திரங்களை வடிவமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் எனக்கு திரைப்படங்களில் வருவது போன்ற பிரமாண்டமான மனித ரோபோக்களை உருவாக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. இதற்காக பலமுறை முயன்று அதில் தோல்வி அடைந்தேன். இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்து இந்த ராட்சத ரோபோவை உருவாக்கியுள்ளேன். இந்த ரோபோ மணிக்கு 1 கிமீ வேகத்தில் நடந்து செல்லும் திறன் பெற்றது. என கூறுகிறார்.


இந்த ராட்சத ரோபோவை வாடகைக்கு எடுக்க விரும்பினால் 1 மணி நேரத்திற்கு 930 அமெரிக்கா டாலர்கள் கொடுத்துவிட்டு கூட்டி செல்லலாம் என்றும் நகுமோமார் கூறுகிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close