கனமழையால் பூமி பிளந்தது; அச்சத்தில் ஆய்வாளர்கள்

  Newstm Desk   | Last Modified : 05 May, 2018 11:04 am


நியூசிலாந்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக பிளென்டி விரிகுடா பண்ணைப் பகுதியில் பூமியில் பிரமாண்டமான பிளவு ஏற்பட்டுள்ளது. 

பூமியில் 71 சதவீதம் நீரும், 29 சதவீதம் நிலப்பரப்பும் சூழ்ந்துள்ளது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னர் நிலப்பரப்பானது 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. பருவகால மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் போன்ற பல்வேறு காரணிகளால் நிலப்பரப்பு சிறிது சிறிதாக அழிந்து தற்போது 21 சதவீதம் மட்டுமே எஞ்சியுள்ளது.


இந்நிலையில் பிளென்டி விரிகுடா பண்ணைப் பகுதியில்  656 அடி நீளத்தில், 98 அடி அகலத்தில் ஏற்பட்டுள்ள பிரமாண்டமான பிளவு அந்த பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதனை பார்வையிட்ட எரிமலை ஆய்வாளர் பிராட்லி ஸ்காட், 60 ஆயிரம் ஆண்டுகள் பழமையான எரிமலை மிச்சங்கள் இதன் அடியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். பிளென்டி விரிகுடாவில் அவ்வப்போது பிளவுகள் ‌ஏற்படுவது சகஜம் என்றாலும், பள்ளத்தாக்கு அளவுக்கு பிளவு பிரமாண்டமாக உருவாகி இருப்பது, அறிவியல் ஆய்வாளர்களை ஆச்சரியத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஆப்பிரிக்காவின் தென்மேற்கு கென்யாவில்  சமீபத்தில் ராட்சத பிளவுகள் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் விரைவில் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close