பீர் கிளாஸ் இமோஜிக்கு மன்னிப்பு கேட்ட சுந்தர் பிச்சை

  Newstm Desk   | Last Modified : 09 May, 2018 03:18 pm

நிரம்பாத பீர் கிளாசில் இருந்து நுரை வரும் கூகுளின் இமேஜிக்கு மன்னிப்பு கேட்டார் சுந்தர் பிச்சை.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த மென்பொருள் மாநாட்டில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பேசினார். கூகுளின் அடுத்தக்கட்ட முயற்சிகள் குறித்து பேசிய அவர் அந்த நிறுவனம் செய்த ஒரு தவறுக்கு மன்னிப்பு கேட்டார். 

முன்னதாக சில நாட்களுக்கு கூகுளின் பீர் மற்றும் பர்கர் இமோஜி டிசைன்களில் தவறுகள் இருப்பதாக பலரும் குற்றம்சாட்டி இருந்தனர்.

பர்கர் இமோஜியில் சீஸ் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை என்றும் பீர் இமோஜியில் நிரம்பாத கிளாசில் இருந்து நுரை பொங்குவதும் போன்றும் டிசைன் செய்யப்பட்டு இருந்தது. 

இதனை ஆப்பிள் நிறுவனத்தின் ஈமோஜிகளுடன் ஒப்பிட்டு பலரும் கூகுளின் தவறை விமர்சித்தனர். அப்போதே இந்த தவறு சரி செய்யப்படும் என்று சுந்தர் பிச்சை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று நடந்த மாநாட்டில் இந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாகவும், அதனை சரி செய்துள்ளதாகவும் கூகுள் நிறுவனத்தின் சார்பில் சுந்தர் பிச்சை தெரிவித்தார். மேலும் திருத்தப்பட்ட ஈமோஜிகளையும் அறிமுகப்படுத்தினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close