நிலவில் 4ஜி சேவை: வோடாபோனின் மாஸ்டர் பிளான்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 28 Feb, 2018 08:03 pm


டிஜிட்டால் இந்தியாவாக மாற்றும் முயற்சியை இந்திய பிரதமர் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நிலாவிற்கு இணைய சேவையை கொண்டு சேர்க்கும் திட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது வோடாபோன் நிறுவனம். 

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான வோடாபோன் நிறுவனம், 2019 ஆம் ஆண்டிற்குள் நிலவிற்கு 4ஜி சேவையை எடுத்து செல்லும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. இதற்கான தீவிர முயற்சியை பெர்லினை சேர்ந்த பி.டி விஞ்ஞானிகள் (தன்னார்வ பகுதிநேர விஞ்ஞானிகள்) களமிறங்கியுள்ளனர். இதன் தொழில்நுட்ப பங்குதாரராக நோக்கியா நிறுவனத்தை இணைத்துக்கொண்டுள்ளது வோடாபோன் நிறுவனம். 


இதுகுறித்து பிடி விஞ்ஞான குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி ராபர்ட் போம் கூறுகையில், ’முதல் மனிதன் நிலவில் தன்னுடைய காலடித் தடத்தை பதித்து 50 ஆண்டுகள் ஆகப்போகிறது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு மீண்டும் நிலவுக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தை பகுதிநேர தன்னார்வ அறிவியலாளர்கள் உருவாக்கி வருகின்றனர். இந்த திட்டத்துக்கு உதவும் வகையில் வோடோபோன் நிலவில் 4ஜி சேவை கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 

நாசா 1972ம் ஆண்டு அனுப்பிய நிலாவுக்கான விண்களத்தில்தான் கடைசியாக மனிதர்கள் நிலாவில் நடந்தார்கள். அப்போது, விண்களத்தில் இருந்து நிலாவில் பயணிக்க பிரத்தியேக வாகனம் உருவாக்கப்பட்டது. தற்போது அந்த வாகனம் நிலாவில்தான் உள்ளது. அடுத்த ஆண்டு நிகழ உள்ள நிலவுக்கான பயணத்தின்போது அந்த வாகனத்தை அடையவும், நிலவின் பரப்பை துல்லியமாக படம்பிடித்து அனுப்பவும் 4ஜி சேவை பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக நிலவில் விண்கலம் தரையிரங்கும் பகுதியில்  ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நெட்வொர்க்கை நோக்கிய நிறுவனம் உருவாக்கித் தரும். அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள கேப் கானவெரல் (Cape Canaveral) பகுதியில் இருந்து  ஃபால்கான் 9 மூலம் விண்கலம் நிலவுக்கு செலுத்தப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close