மழையோ, புயலோ... இனி இது சொல்லும்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Mar, 2018 08:14 pm


அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நாசா, அதிதொழில்நுட்ப வானிலை ஆய்வு செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இது புயல், மழை போன்ற வானிலை நிலவரங்களை துல்லியமாக முன்கூட்டியே கண்டறியும் திறன் கொண்டது. 

கேப் கனவரால் விமானப்படை ஏவுதளத்திலிருந்து அட்லாஸ் வி ராக்கெட் மூலம் கோஸ்-எஸ் என்ற இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு விண்வெளி சுழற்வட்டப்பாதைக்கு ஏவப்பட்டது. ஓராண்டில் வானிலை, கடல் நிலவரங்களை அறியும் நாசாவின் 3வது செயற்கைக்கோள் இதுவாகும். இதனால் இதை நாசா ’விண்வெளியில் மூவிழிகள்’ என அழைக்கிறது. சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த செயற்கைக்கோளை நாசா விண்ணில் செலுத்தியுள்ளது.


அமெரிக்காவை வெறிதனமாக தாக்கும் சூறாவளிகள், புயல், காட்டுத் தீ, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களை துல்லியமாக அறிவதற்கு இந்த செயற்கை கோள் உதவும். இந்தத் தொடரில் கோஸ்-16 என்ற முதல் செயற்கைக் கோள் அட்லாண்டிக் மற்றும் கிழக்குக் கடற்கரையை கண் காணித்து வருகிறது. இந்த கோஸ் தொடரில் இன்னும் 2 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த நாசா திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கோஸ்-டி என்பட்யு 2020-ம் ஆண்டிலும் கோஸ்-யு என்பது 20124-ம் ஆண்டிலும் விண்ணில் செலுத்தப்பட வாய்ப்புள்ளது.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close