விண்வெளிக்கு செல்லும் சிம்மோன் ரோபோ!

  ஐஸ்வர்யா   | Last Modified : 08 Jun, 2018 04:01 pm

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு உதவுவதற்காக புதிய ரோபோ ஒன்று அனுப்பப்பட உள்ளது.

விண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு உதவுவதற்காக புதிய ரோபோ ஒன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது.  ஜெர்மனியை சேர்ந்த ஏர்பஸ் (AIRBUS) மற்றும் ஐ.பி.எம் (IBM) ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோவினை வடிவமைத்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோவிற்கு  சிம்மோன் CIMON (Crew Interactive Mobile CompanioN) என பெயரிடப்பட்டுள்ளது. சுயமாக முடிவுகளை எடுக்கும் சிம்மோன் யாருடைய உதவியுமின்றி விண்வெளியில் களமிறங்கி இயங்கும் திறன் உடையது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வெறும் 5 கிலோ எடைகொண்ட இந்த ரோபோ வரும் ஜுன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி விண்வெளி வீரர் டாக்டர். அலெக்சாண்டர் கெர்ஸ்ட் தெரிவித்துள்ளார். 

சிம்மோன் ரோபோ வழக்கமான வேலைகளைச் செய்வதோடு, அதன் முகம், குரல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை மூலம், ஒரு மனிதாக அவதாரமெடுத்து விண்வெளி வீரர்களுக்கு சக பணியாளராக மாறுகிறது. அதுமட்டுமின்றி, தெரியாதவற்றை  கற்றுக் கொள்ளும் திறன், பிரச்னைகளுக்கு தீர்வுகளை வழங்கும் திறன் போன்றவற்றை ஸ்மார்ட்டாக செய்யும் என்றும் விண்வெளி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொள்ளும் திறன் உடையது  என்றும் ஏர்பஸ் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close