கார்ல பறக்கலாம்!! இங்கு காரே பறக்குது!!! (வீடியோ)

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Mar, 2018 08:48 pm


சாலையில் மணிக்கு 100 மைல் வேகம் ஓடும் மற்றும் வானில் மணிக்கு 112 மைல் வேகத்தில் பறக்கும் உலகின் முதலாவது பறக்கும் கார் சுவிட்சர்லாந்தில் நடந்த சர்வதேச மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


பால்-வி லிபர்டி எனும் பறக்கும் காரை வால்-வி நிறுவனம் தயாரித்துள்ளது. மூன்று சக்கரங்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் ஹெலிகாப்டர் மற்றும் மோட்டார்-டிரைசைக்கிள் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 2 பேர் அமர்ந்து பயணம் செய்யலாம். ஐரோப்பா மற்றும் அமெரிக்க சாலை மற்றும் வானில் பயன்படுத்த அனுமதி பெற்றிருக்கிறது.


கார்பன் ஃபைபர், டைட்டானியம் மற்றும் அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் பறக்கும் காரின் எடை 680 கிலோ. குறைந்தளவு எடை கொண்டிருப்பதால் தரையில் இருந்து குறைந்த தூரத்திலேயே டேக்-ஆஃப் ஆகும். அந்த வகையில் 165 மீட்டர் ரன்வேயில் டேக்-ஆஃப் ஆகி, 30 மீட்டரில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகின் முதல் பறக்கும் காரில் 100 பி.ஹெச்.பி. பவர் கொண்ட இரண்டு இன்ஜின்களை கொண்டிருக்கிறது. தரை மற்றும் வானில் அதிகபட்சம் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. பால்-வி வாகனத்தை வாங்குவோர், முறையான ஓட்டுநர் உரிமம் மற்றும் விமான ஓட்டிகளுக்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.


2019-ம் ஆண்டு முதல் 50 முதல் 100 வாகனங்களை முதற்கட்டமாக தயாரிக்க வால்-வி திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வரவேற்பை பொறுத்து, 2020-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிக்கப்படும் பறக்கும் கார் ஒவ்வொன்றும் 150 மணி நேர சோதனைக்கு பின் விநியோகம் செய்வதற்கான சான்று வழங்கப்படுகிறது. பால்-வி லிபெர்டி விலை ஆறு லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3.90 கோடி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close