பூமியை நோக்கி விழும் விண்கல்! அணு ஆயுதம் வைத்து தாக்க திட்டமிடும் நாசா

  ஐஸ்வர்யா   | Last Modified : 11 Mar, 2018 07:29 pm


பூமியை நோக்கி விழும் விண்கல்லால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க அணு ஆயுதத்தை ஏவி அதனை அழிப்பதற்கான திட்டத்தில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

பூமியை நோக்கி வந்துக் கொண்டிருக்கும் விண்கல்லை வழிமறித்து அதனை சிறிய துண்டுகளாக சிதறடிப்பதா அல்லது அணு ஆயுதத்தை ஏவி முழுவதுமாக அழித்து விடுவதா என்று நாசாவின் வல்லுனர் குழு ஒன்று தீவிரமாக ஆலோசித்து திட்டமிட்டு வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விண்கல்லை அழிக்க அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் முயற்சியில் நாசா, தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் இரண்டு எரிசக்தி துறையின் ஆய்வக ஆய்வகங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 

பென்னு( bennu) என்ற அந்த விண்கல் 174 பில்லியன் பவுண்ட் எடை கொண்டது. பூமியில் இருந்து சுமார் 54 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது. அது பூமியைத் தாக்கினால், இதுவரை சோதிக்கப்பட்ட மிகப்பெரிய ஹைட்ரஜன் வெடிகுண்டை விட 20 மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விண்கல் 2135ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி பூமியை தாக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்கல் விரைவில், பூமிக்கு மிக அருகில் செல்லும் என்று கூறப்படுகிறது. அப்போது அந்த விண்கல்லுக்கு ஆய்வுக்கலன் ஒன்றை அனுப்பி, அது என்ன மாதிரியான கல் என்று ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக அனுப்பப்படும் விண்கலம், 2023ம் ஆண்டு வாக்கில் பூமிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.