வாட்ஸ்அப் அப்டேட்; வந்தது குரூப் டிஸ்க்ரிப்ஷன்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 18 Mar, 2018 06:16 pm


வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் பதிப்புகளுக்கான குரூப் டிஸ்க்ரிப்ஷன் வசதியை அப்டேட் செய்துள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக சோதனை முயற்சியில் இருந்த குரூப் டிஸ்க்ரிப்ஷன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. 

புதிய குரூப் டிஸ்க்ரிப்ஷன் வசதி பெரிய அப்டேட் இல்லை என்றாலும், பயனுள்ள அம்சமாக இருக்கிறது. புதிதாக வழங்கப்பட்டிருக்கும் இந்த அப்டேட்டை பெற வாட்ஸ்அப் அப்டேட் செய்ய வேண்டும்.

* முதலில் வாட்ஸ்அப் செயலியை ஸ்மார்ட்போனில் திறந்து, டிஸ்க்ரிப்ஷன் உருவாக்க வேண்டிய குரூப்-ஐ தேர்வு செய்ய வேண்டும்.

* இனி குரூப் இன்ஃபோ ஆப்ஷனில் டிஸ்க்ரிப்ஷன் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

* குரூப் டிஸ்க்ரிப்ஷனை புதிதாய் சேர்க்கவோ அல்லது மாற்றியமைக்கவோ முடியும். மாற்றப்படும் குரூப் டிஸ்க்ரிப்ஷனை குறிப்பிட்ட குரூப்-இல் இருக்கும் அனைவராலும் பார்க்க முடியும்.  

வாட்ஸ்அப் குரூப் பயன்படுத்துவோரை தேடுவதற்கான வசதியும், வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால்களிடையே எளிமையாக மாற்றிக் கொள்ளவும் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close