அரை மணிநேரத்தில் கண்டம் விட்டு கண்டம் பயணிக்கலாம்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 14 Apr, 2018 06:55 am


விமான பயணமா? என வாய்பிளந்த காலம் மாறி, தற்போது 100 கிமீ தூரத்திற்கே விமானத்தில் செல்லும் நிலை வந்துவிட்டது. இந்நிலையில் விமான பயணத்திற்கு குட்பை சொல்லிவிட்டு, ராக்கெட் பயணத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனம் விண்வெளி ஆய்வுகளிலும், ராக்கெட் தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் ஈலன் மஸ்க், அரசின் உதவியுடனும், உதவியின்றியும் இதுவரை பல்வேறு ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்பியுள்ளார். மேலும் பல ஆய்வுகளில் நாசாவுடன் மல்லுக்கட்டும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பவும் திட்டமிட்டு வருகிறது.  

இந்நிலையில் ஒரு நகரில் இருந்து மற்றொரு நகருக்கு பயணிக்க ராக்கெட் பயணத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக ஸ்பேஸ் எக்ஸ்  நிறுவனம் தெரிவித்துள்ளது . இன்னும் 10 வருடங்களில் இந்த திட்டம் சாத்தியமாகுமாம். நியூயார்க் - ஷாங்காய் நகரங்களுக்கு இடையே விமானத்தில் சென்றால் 15 மணி நேரம் ஆகும். ஆனால், இந்த ராக்கெட் பயணத்தின் மூலம் 7,400 மைல் தூரத்தை வெறும் 39 நிமிடங்களில் கடந்து விடாலாம் என்றும், லண்டனில் இருந்து நியூயார்க்குக்கு 29 நிமிடங்களில் சென்றுவிடலாம் என்றும் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த ராக்கெட் பயணம் தொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close