சூரிய குடும்பத்தின் ரகசியங்களை சொல்கிறது இந்த 'வைர' விண்கல்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 19 Apr, 2018 10:47 pm


சூடானில் இருக்கும் நுபியன் பாலைவனத்தில் விழுந்த விண்கல்லில் வைரம் இருப்பது கண்டறியபட்டுள்ளது. 

கடந்த 2008ம் ஆண்டு விண்கல் ஒன்று சூடான் பாலைவன பகுதியில் விழுந்தது. வெடித்து சிதறிய இந்த விண்கல்லில் வைரகற்கள் இருப்பது சூடானின் கார்டோம் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. விண்கல்லில் வைரகற்களா? அப்ப கிரகத்தில் வைரம் இருக்குமா? என்ற கேள்வி எழுவதுண்டு. பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு நமது சூரிய குடும்பம் உருவான போது இந்த விண்கல்லும் உருவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. 

முதல் முதலில் வெறும் கற்களாக சுற்றிக்கொண்டிருந்தவை, பல கோடி ஆண்டுகளாக ஒன்றோடு ஒன்று மோதி பின்னர், நமது சூரிய குடும்பமாக உருவாக்கின. அவற்றில் பல உடைந்த கற்கள் காலப்போக்கில், சூரிய குடும்பத்தை தாண்டி வெளியே சென்றுவிட்டன. சில இன்னும் சூரியனை சுற்றிக் கொண்டு வருகின்றன. அதில் ஒன்று தான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள விண்கல். இதை  ஆய்வு செய்யும்போது, சூரிய குடும்பம் உருவான போது ஏற்பட்ட பல மாற்றங்களை தெரிந்து கொள்ள முடியுமாம்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close