தீயினால் அழிவு இருக்கு! கொளுத்திபோடும் நாசா!!

  Newstm Desk   | Last Modified : 30 Apr, 2018 08:42 pm


கடந்த 10 நாட்களில் ஏற்பட்ட தீயினால் இந்தியாவிற்கு மிகப்பெரும் ஆபத்து காத்திருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் சேட்டிலைட் புகைப்படங்கள் கடந்த 10 நாட்களில் இந்தியாவில் பல பகுதிகளில் தீ பிடித்துள்ளதாகவும், இதனால் மிகப்பெரிய அபாயம் காத்திருப்பதாகவும் எச்சரித்துள்ளது. நாசா வெளியிட்டுள்ள இந்திய வரைபடத்தில் பல இடங்களில் சிவப்பு நிற புள்ளிகள் இடம்பெற்றுள்ளது இவை அனைத்து தீயினால் பாதிக்கப்பட்ட இடங்கள் என குறிக்கப்பட்டிருக்கிறது. 

உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, சட்டீஸ்கர் மற்றும் சில தென்னிந்திய பகுதிகள் தீயிக்கு இரையாகியுள்ளதாகவும், கடுமையான வெயிலின் தாக்கமே இதற்கு காரணம் என்றும் நாசா தெரிவித்துள்ளது. நாசாவின் புகைப்படம் காட்டுதீ, வயல்வெளிகளில் ஏற்பட்ட தீயினால் 14% அளவுக்கு கரும்புகை சூழ்ந்துள்ளதை படம்பிடித்துள்ளது.  இது சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாக ஹரியானா மற்றும் பஞ்சாப் போன்ற வடமாநிலங்களில் விளைச்சல் சரிவர இல்லாத விரக்தியில் விவசாயிகளே தங்களது நிலங்களுக்கு தீ வைத்துவிடுகின்றனர்.  இதுபோன்று விளை நிலங்களுக்கு தீ வைப்பது நிலங்களுக்கு மட்டுமல்லாது சுற்றுசூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் உணரவேண்டும் என நாசா அறிவுறுத்தியுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close