வயதான சூரியன் இன்னும் சிறிது காலத்தில் செத்துபோகும்- விஞ்ஞானிகள்

  Newstm Desk   | Last Modified : 08 May, 2018 07:34 pm


உலகிற்கே ஒளிக்கொடுக்கும் சூரியனுக்கு வயதாகிவிட்டதால் அதன் ஆயுள் காலம் இன்னும் சில ஆண்டுகளில் முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சூரியனின் வயது, அதன் ஆயுள் காலம் எப்போது முடிகிறது அதன்பின் பூமியின் நிலை என்னவாகும் என ஆராய்ச்சியை மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில், சூரியனின் ஆயுட்காலம் மொத்தம் 10 பில்லியன் ஆண்டுகள் என்றும், அதில் 5 பில்லியன் ஆண்டுகள் கழிந்துவிட்டது. மேலும்  5 பில்லியன் ஆண்டுகளில் சூரியன் தன் ஆயுளை முடித்துக்கொண்டு, நெபுலா என்ற ஒளிரும் புகைப்படலமான மாறும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுகள் செல்ல செல்ல சூரியனின் எரிபொருளாக உள்ள ஹைட்ரஜன் அளவு குறைந்து, சிகப்பு நிறத்திற்கு மாறும். சூரியனின் எடை பாதியாக குறையும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

இப்படி நிறம் மாறி, எடை குறைந்த சூரியனையே நெபுலா (Planetary nebula) என கூறப்படுகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close