ரஜினி டி-ஷர்ட் அணிந்து ஆப்பிள் விருது வாங்கிய தமிழர்

  Newstm Desk   | Last Modified : 07 Jun, 2018 09:24 pm
tamil-developer-win-apple-design-award

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மென்பொருன் வடிவமைப்பாளர்கள் மாநாட்டில் சென்னையை சேர்ந்த இளைஞர் ஆப்பிள் நிறுவனத்தின் விருதை பெற்றார். 

அமெரிக்காவில் சான் ஜோஸ் நகரில் ஆப்பிள் நிறுவனம் சார்பில் மென்பொருள் வடிவமைப்பவர்களுக்கான மாநாடு நடந்து வருகிறது. இதில் சென்னை சேர்ந்த ராஜா விஜயராமன் அந்நிறுவனத்தின் 'ஆப்பிள் டிசைன் விருது' பெற்றார். 

கால்சி 3 என்ற அவருடைய புதுமையான கால்குலேட்டர் செல்போன் செயலிக்காக இந்த விருதை ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. விருது வழங்கப்படுவது குறித்து ராஜாவுக்கு முன்னதாக தெரியப்படுத்தாமலே ஆப்பிள் நிறுவனம் அவருக்கு இந்த விருதை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. விருது வாங்கும் போது அவர் தன் விருப்ப நட்சத்திரமான நடிகர் ரஜினியின் உருவம் பதித்த டி-ஷர்ட் அணிந்திருந்தார். 

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் மெக்கானிக்கல் பொறியியல் பட்டதாரி. கிராபிக்ஸ் துறையில் திறன்களை வளர்த்துக் கொண்டு, பின்னர் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். ஒரு சில அனிமேஷன் திரைப்படங்களுக்கு கிராஃபிக்ஸ் கலைஞராகவும் இவர் பணிபுரிந்துள்ளார். பின்னர் செல்போன் செயலிகள் மீது ஆர்வம் வந்துள்ளது. அதன் பின் செயலிகள் உருவாக்க கோடிங் கற்றுக்கொண்டார்.

அப்போது, வழக்கமான கால்குலேட்டருக்கு பதிலாக புதுவிதமான கால்குலேட்டர் ஆப் ஒன்றை வடிவமைக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டார். ஐஓஎஸ் இயங்குதளத்தில் Multitasking, Face ID மற்றும் Touch ID ஆகிய வசதிகளை பயன்படுத்தி புதிதாக ‘Calzy’(கால்சி) என்ற செயலியை வடிவமைத்துள்ளார்.

இவரின் இந்த செயலியில் வழக்கமான கால்குலேட்டரில் இருக்கும் நினைவக செயல்பாடுகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக இவராகவே ஒரு கணக்கிடும் செயல்பாட்டினை புகுத்தியுள்ளார். இது அறிவியல் கால்குலேட்டராக செயல்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியில் மேற்கொள்ளப்படும் கணக்கீடுகளை Drag & Drop முறையில் இதர செயலிகளுக்கும் கொண்டு செல்லும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் புக்மார்க் மற்றும் கடந்த கால கணக்கீடுகள் வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கணக்கீடுகளை நேரம், தேதி வகையில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். 

2014ஆம் ஆண்டு ராஜா விஜயராமன், உருவாக்கிய Calzy செயலி, தற்போது மேலும் மெருகேற்றப்பட்டு Calzy 3 என்ற மேம்பட்ட வெர்ஷனில் கிடைக்கிறது. ராஜா விஜயராமன் உருவாக்கிய இந்த நவீன செயலி உலகம் முழுதும் உள்ளவர்களால் பெரிதும் விரும்பி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்சமயம் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிப்போரால் இந்த செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலி 65 உலக மொழிகளில் கிடைக்கிறது. இதனை ரூ.159 செலுத்தி ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட மொபைல்களில் மட்டுமே பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close