தீயை அணைக்க டிராகன் ரோபோ வடிவமைப்பு!

  ஐஸ்வர்யா   | Last Modified : 09 Jun, 2018 06:04 am
japanese-researchers-developed-a-robot-made-of-a-hose-that-can-spray-water-its-called-dragon-robot

தீ விபத்தின் போது தீயை அணைக்க டிராகன் வடிவிலான தீயணைப்பு ரோபோவை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 

சாக்கடை தூய்மை செய்யும் பணி முதல் பைலட் பணி வரை அனைத்து வேலைகளையும் அசால்ட்டாக செய்து அசத்திவருகிறது ரோபோக்கள். மனித வாழ்வில் பின்னி பிணையப்பட்டுள்ள ரோபோக்கள் தனது அடுத்த நகர்வை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. 

சுனாமி, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை பேரிடரின் போது தீயை அணைக்க சிரமம் ஏற்படும் நிலையில் டோஹோகு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பங்களை கொண்ட APT என்ற ரோபோவை உருவாக்கியுள்ளனர். தீவிபத்தின் போது பல்வேறு பகுதிக்கு பரவியுள்ள தீயை அணைக்க டிராகன் வடிவிலான தீயணைப்பு கருவியை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.  டிராகன் ரோபோ, கடினமான கட்டமைப்பு கொண்ட கட்டடங்கள், ஜன்னல்கள் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள தீயை எளிதாக சென்று அணைத்துவிடுகிறது. மேலும் தரையிலிந்தபடி மேல் எழுந்து தீயை அணைக்கும் திறன்கொண்டது. அதுமட்டுமின்றி டிராகன் ரோபோ, உயர் அழுத்த ஜெட்டுக்களைப் பயன்படுத்தி பறந்து செல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அஸ்திரேலியாவில் கடந்த மாதம் நடைபெற்ற ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் சர்வதேச மாநாட்டில் டோஹோகு பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ரோபோவை அறிமுகப்படுத்தினர். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close