தீவிரவாதிகள் அதிகம் பயன்படுத்துவது வாட்ஸ்ஆப் தானாம்!

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2018 08:04 am
whatsapp-is-favourite-app-for-terrorist-for-messaging

தீவிரவாதிகள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள வாட்ஸ்ஆப்பை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ்ஆப் தான் இப்போதைக்கு இளசுகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் அதிகம் பயன்படுத்தும் செயலியாக உள்ளது. மேலும் மாதம் ஒரு அப்டேட்டுடன் தனது பயன்பாட்டாளர்களை வாட்ஸ்ஆப் தக்கவைத்துக்கொண்டு வருகிறது.

இந்நிலையில் வாட்ஸ்ஆப் சாதாரண மக்களின் தொடர்புக்கு மட்டுமின்றி தீவிரவாதிகள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும் பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவலை மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டெல்லியில் நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேச விரோத சக்திகள் இதனை தவறான செய்திகளை பரப்பவும் பயன்படுத்தி வருவதாக தெரிகிறது.

2016ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் உள்ள நக்ரோட்டா ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய ஜய்ஷ்-இ-முகமது என்னும் தீவிரவாதி கைதான பிறகு நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 7 பேரை கொன்ற அந்த தாக்குதல் சம்பவம் நடத்துவதற்கான திட்டத்தை அவர்கள் முழுக்க முழுக்க வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தி தான் போட்டுள்ளனர்.

இந்நிலையில் இது போன்ற சம்பவங்களை குறைக்கவும். இனியும் நடைபெறாமால் இருக்கவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக சில இடங்களில் வாட்ஸ்ஆப் வீடியோ காலிங் வசதியை அரசு தடை செய்ய உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close