மைக்ரோசாஃப்டின் மாஸ்டர் பிளான்! தகவல்களை கண்டெய்னரில் அடைக்க திட்டம்!!

  ஐஸ்வர்யா   | Last Modified : 14 Jun, 2018 05:07 am
microsoft-deploys-underwater-datacenter-off-the-scottish-coast

கடலுக்கு அடியில் தகவல் சேமிப்பு மையத்தை அமைக்கும் முயற்சியில் மைரோசாஃப்ட் நிறுவனம் களமிறங்கவுள்ளது.  

கடலுக்கடியில் தகவலை எப்படி சேமிக்க முடியும்? என்ற கேள்வி அனைவருக்கும் எழும். ஆனால் நாங்கள் கண்டெய்னர் பயன்படுத்தி தகவல்களை பத்திரமாக சேகரிப்போம் என சொல்கின்றனர் மைக்ரோசாஃப்ட் ஆய்வாளர்கள்.

ஸ்காட்லாந்தில் இருக்கும் ஒரு தீவின் கடல்பகுதியில் தான் தகவல் மையத்தை அமைக்கும் சோதனை முயற்சியில் தான் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் களமிறங்கியுள்ளது. அண்மையில் கேம்ப்ரிடிஜ் அனாலிடிகா நிறுவனத்திடன் பயனர்களின் தகவல்களை பரிமாறியதாக ஃபேஸ்புக் நிறுவனம் சர்ச்சையில் சிக்கியது. அதேபோல் தகவல் திருட்டில் இருந்து பாதுகாக்கத்தான் மைரோசாஃப்ட் இந்த புது முயற்சியை எடுத்துள்ளதா என கேட்கலாம். ஆனால் உண்மையில் அதற்காக இல்லையாம், யாருடைய பராமரிப்பும் இல்லாமல் 5 ஆண்டுகளுக்கு இந்த தகவல் மையம் இயங்குமாம். இதற்காக தான் இந்த புதிய ஐடியா என்கிறது மைக்ரோசாஃப்ட்!

இது அண்மையில் தொடங்கப்பட்ட திட்டம் இல்லை, கடந்த 3 ஆண்டுகளாகவே கடலுக்கடியில் தகவல் சேமிப்பு மையத்தை அமைக்கும் முயற்சியில் “ப்ராஜெக்ட் நேட்டிக்” என்ற பெயரில் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. பொதுவாக தகவல் மையத்தை அமைக்க மின்சாரம், வெப்பம், குளிர்சாதன இயந்திரங்கள், போக்குவரத்து வசதி ஆகியவை தேவை. இவையெல்லாம் கடலுக்கடியில் கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது? ஆனால் நிலப்பகுதியில் கிடைக்கும் மேற்கண்ட வசதிகளை விட மிகக்குறைவான செலவில் கடலுக்கடியில் வசதிகள் கிடைக்கும் என்கிறது மைக்ரோசாஃப்ட்.

முதலில் மின்சாரம், தகவலை சேமிக்க மின்சாரம் இன்றியமையாதது. கடலுக்கடியில் இருக்கும் சூரிய ஒளி, காற்று மற்றும் கடல் அலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து தேவைப்படும் மின்சாரத்தை எடுத்துவிடலாம். அடுத்ததாக வெப்பம்,கடலக்கடியில் கிடைக்கும் குறைந்த பட்ச வெப்பமே டேட்டா சென்ருக்கு போதுமாக இருக்குமாம், மின்சாரத்தை வைத்து குளிர்சாதன இயந்திரங்களை எளிதாக இயக்கமுடியும், மனிதர்கள் யாரும் தகவல் மையத்தில் இல்லாததால் போக்குவரத்து வசதிக்கு வேலையே இல்லை என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.


 
கடலுக்கடியில் 12 அடுக்குகளில் 864 சர்வர்களும் 27.6 பீட்டாபைட் அளவுள்ள தகவல்கள் சேமிக்கும் டிஸ்க்குகளும் இருக்கின்றன. இது 5 மில்லியன் திரைப்படங்களைச் சேமித்து வைக்கும் சேமிப்பு திறன் கொண்டது. இவற்றை நீர் புகாத கண்டெய்னரில் வைத்து கடலுக்கடியில் இறக்கப்படும். இந்த தகவல் மையம் 5 வருடங்களுக்கு மனிதர்களின் உதவியின்றி இயங்கும் என மைரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close