உலகின் தலைசிறந்த டாப் 10 ஏவுகணைகள் !!!

  ஐஸ்வர்யா   | Last Modified : 14 Mar, 2018 01:34 pm

உலகளவில் பல்வேறு நாடுகளும் அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களை தயாரிப்பதில் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில் உலகின் மிகவும் அதிநவீன தலைசிறந்த ஏவுகணைகளின் பட்டியலை பற்றிய தொகுப்பினை இங்கு காணலாம்.

பிஜிஎம்-17(PGM-17 Thor): பிஜிஎம்-17 தோர் கண்டம் விட்டு கண்டம் பாயும் உலகின் முதல் ஏவுகணை என்ற பெருமை பிஜிஎம்-17 தோர் (PGM-17 Thor) கொண்டிருக்கின்றது.இந்த ஏவுகணையானது சுமார் 2400 கிமீட்டர் வரை வெப்ப அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டிருக்கின்றது.

வி-2 ராக்கெட் ( V-2 Rocket ): இன்றைய ஏவுகணை மற்றும் ராக்கெட் தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாக வி-2 ராக்கெட் திகழ்கின்றது. மனிதன் தயாரித்து விண்வெளியில் நுழைந்த ஏவுகணை என்ற பொருமையும் கொண்டிருக்கின்றது வி-2 ராக்கெட். வி-2 ராக்கெட் ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டால் பாதியில் நிறுத்த முடியாது, செங்குத்தாக வானில் சீறி பாய்ந்து இலக்கினை மணிக்கு சுமார் 4,000 மீட்டர் வேகத்தில் தாக்கும் திறன் கொண்டிருக்கின்றது.

டோமஹாக் (Tomahawk): அமெரிக்க கடற்படை பயன்படுத்தும் ஒலியியல் சார்ந்த ஏவுகணை தான் டோமஹாக். இந்த ஏவுகணையினை கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்தும் ஏவ முடியும்.இதில் வழங்கப்பட்டிருக்கும் தொழில்நுட்பமானது பல் விதங்களில் பயன்படுத்தவும் இலக்குகளை துல்லியமாகவும் தாக்க வழி செய்யும்.

அக்னி ஏவுகணைகள் (Agni series): அக்னி ஏவுகணை என்பது இந்தியாவினால் உருவாக்கப்பட்ட பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியின் பெயருடைய நடுத்தர தூரம் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வகைகளைக் குறிக்கும். அக்னி நீண்ட இயங்கு தூரம் கொண்ட அணு ஆயுதங்களை சுமந்து சென்று நிலத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்தைத் தாக்கும் ஏவுகணையாகும். அக்னி ஏவுகணைக் குடும்பத்தில் முதல் ஏவுகணையான அக்னி-1, ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு 1991-ஆம் ஆண்டு சோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு தற்போது வரை அக்னி- 1, அக்னி-2, அக்னி- 3, அக்னி- 4, அக்னி- 5, அக்னி- 6 ஆகிய ஏவுகணைகள் தாக்குதலுக்கு தயார் நிலையில் உள்ளன.

ஜெரிகோ lll (Jericho lll): இஸ்ரேல் நாட்டின் ஆயுதங்கள் சார்ந்த தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும் நிலையில் இந்த ஏவுகணை குறித்த சில தகவல்கள் மட்டும் கசிந்துள்ளன. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக ஜெரிகோ lll இருக்கும் என்பதோடு சுமார் 1000 கிலோ எடையை அதிகபட்சம் 2000 கிமீட்டர் முதல் 11,500 கி. மீட்டர் வரை பயணித்து தாக்கும் என்றும் கூறப்படுகின்றது.

யுஜிஎம்-133 ட்ரைடென்ட் ll (UGM-133 Trident ll): மார்டின் ஸ்பேஸ் சிஸ்டம்ஸ் தயாரித்த இந்த ஏவுகணை நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து தாக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதம் இந்த ஏவுகணை மூலம் பல்வேறு அணு ஆயுதங்களை செலுத்த முடியும் என்பதோடு இலக்குகளை மிகவும் துல்லியமாக தாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மணிக்கு 29 ஆயிரம் கி.மீ வேகத்தில் பயணிக்கக் கூடியது அமெரிக்காவின் இந்த ஏவுகணை.

எம்51 (M51): நீர்மூழ்கி கப்பல் மூலம் கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்ட எம்51 பிரான்ஸ் கடற்படையின் தயாரிப்பாகும். அணு ஆயுதம் வெப்பஅணு ஆயுதங்களை சுமந்து கொண்டு இலக்குகளை துல்லியமாக தாக்கும் படி எம்51 வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிஎஃப்-41 ( DF-41): இஸ்ரேல் போன்றே சீனாவின் ஆயுதங்கள் சார்ந்த ரகசியங்களும் ரகசியமாக வைக்கப்படுகின்றன. டிஎஃஎப்-41 ஏவுகணை கண்டங்களுக்கு இடையே தாக்கும் திறன் கொண்டிருக்கின்றது.டிஎஃப்-41 ஏவுகணை அதிகபட்சம் சுமார் 14,000 கிமீட்டர் தொலைவில் இருக்கும் இலக்குகளை துல்லியமாக தாக்க முடியும். இருப்பினும் உலகின் எந்த பகுதியையும் இதை கொண்டு தாக்க முடியும் என்கின்றனர் ஆயுத ஆய்வாளர்கள். (சீனா மிகப்பெரிய நாடு என்பதால், அதன் எல்லையில் இருந்து தாக்கும்போது எந்த ஒரு நாட்டின் மீதும் ஏவுகணையை செலுத்த முடியும்.)

எல்ஜிஎம்-30 மின்யூட்மேன் (LGM-30 Minuteman): 13,000 கிலோமீட்டர் வரை இலக்குகளை தாக்கும் திறந் கொண்ட எல்ஜிஎம்-30 ஏவுகணை அமெரிக்க தயாரிப்பு என்பதோடு தற்சமயம் அமெரிக்கா மட்டுமே வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.ஆணு ஆயுதம், ட்ரைடென்ட் மிசைல் சிஸ்டம்ஸ் மற்றும் ஸ்டெல்த் பாம்பர் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகும்.

ஆர்-36 (R-36 series): பனி போர் நடைபெற்ற காலத்தில் தயாரிக்கப்பட்ட ஆர்-36 ஏவுகணை அதிக எடையை சுமக்கும் திறன் கொண்டிருக்கின்றது.10 வித வார் ஹெட்களை கொண்டிருக்கும் இன்த ஏவுகணை உலகின் அதி பயங்கர ஆயுதங்களில் ஒன்றாக கருதப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close