விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கையும், சாதனைகளும்

  முத்துமாரி   | Last Modified : 14 Mar, 2018 01:04 pm

உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் 1948ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி இங்கிலாந்து ஆக்ஸ்போர்டில் பிறந்தவர். சிறுவயது முதலே எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என எண்ணி ஏன்? எதற்கு? எப்படி? என தன்னிடமே கேள்வி கேட்டுக்கொள்வார். அதற்கான விடையையும் தேடி கண்டுபிடித்து விடுவார்.

கல்லூரி காலத்தில் தன்னுடைய 21வது வயதில் 'Amyotrophic Lateral Sclerosis' என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவரது கை, கால்கள் செயல் இழந்து பேச்சு வராமல் திணறினார். முக அசைவுகளை மட்டுமே கொண்டிருந்த அவர் உடல் அசையாவிட்டாலும் தனது மனதை திடமாகவே வைத்திருந்தார். கடுமையான உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் செயலிழந்த உடல் உறுப்புகளை தாங்கும் அளவுக்கு கருவிகளை உருவாக்கி ஒரு சக்கர நாற்காலியில் பொருத்திக்கொண்டார். பின்னர் முக அசைவுகளை வைத்து கம்ப்யூட்டர் உதவியுடன் பேசி வந்தார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். இயற்பியல் துறையில் பட்டம் பெற்று பேராசிரியராக தனது பணியைத் தொடங்கினார். எழுத்து திறமையிலும் சாதனை படைத்த இவர் எழுதிய புத்தகங்கள் உலக அளவில் புகழ்பெற்றவை. 'A Brief History of Time' என்ற நூல் குறிப்பிடத்தக்கது. இந்த நூல் தமிழ், ஆங்கிலம் உள்பட 30க்கும் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இயற்பியல் துறையில் குவாண்டம் கோட்பாடு (Quantum Theory), பிளாக் ஹோல்(Black hole), அண்டவியலில் பிக்பேங்க் கொள்கை (bigbang theory), டைம் மெஷின்(Time Machine), ஏலியன்(Alien), குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். தற்போதுள்ள இயற்பியல் துறையில் இவரது கருத்துக்களை பின்பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைவரும் அறிந்துகொள்ளும் விதத்தில் எளிமையான முறையில் அறிவியல் ஆராய்ச்சி முடிவுகளை கொடுத்துள்ளார். 'higgs boson' என்ற துகளினால் இந்த அண்டத்திற்கு பேராபத்து உள்ளது அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"வாழ்க்கை கடினம்தான்; ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது" என்ற அவரின் வார்த்தைகள் மற்றும் அவரது சாதனைகள் பலருக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகின்றன. விண்வெளிக்கு பயணம் செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. ஆனால் அது அவரது நிறைவேறாத கனவாகவே மாறிவிட்டது. விமானத்தில் மட்டும் அண்டார்டிகா சென்று வந்தார்.

சுமார் 55 வருடங்கள் சக்கர நாற்காலியிலே தனது வாழ்க்கையை கழித்த அவரது அறிவியல் சாதனைகள் அளப்பரியவை. 76 வயதான அவர், லண்டனில் உள்ள தனது வீட்டில் இன்று காலமானார். "எந்த நிலையிலும், நம் மீதுள்ள நம்பிக்கையை நாமே இழந்துவிடக் கூடாது" என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டும் விதமாக வாழ்ந்தவர் ஹாக்கிங். அவர் மறைந்தாலும், அவரது சாதனைகள் என்றுமே நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close