“ஐ லவ் யூ”... மீண்டும் வைரலாகும் மொட்ட கடிதாசி!

  ஐஸ்வர்யா   | Last Modified : 05 Jul, 2018 03:55 am
tricky-chat-app-viral-in-social-media

சமூக வலைதளமான ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கை லாகின் செய்தவுடன் வந்து விழுவது சம்பந்தமே இல்லாத, ஊர், பேர் தெரியாத விமர்சனங்கள்! என்ன அது? என்பதை பார்க்கலாம்.

ஸ்மார்ட்போனே உலகம் என மயங்கி கிடக்கும் இளைஞர்களை கவர தினம்தினம் பல ஆப்ஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. பொழுதுபோக்குக்காக ஆரம்பிக்கப்படும் இந்த ஆப்ஸ்கள் ஒரு கட்டத்தில் அடிமையாக்கி விடுகின்றன. அதுபோன்று கடந்த வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வைரலான ஆப் தான் சரஹா!

அதாவது நாம் மற்றவர்களிடம் கூறவரும் கருத்துக்களையோ, செய்திகளையோ, விமர்சனங்களையோ நம் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் துண்டு மொட்ட கடிதாசி போல பிறருக்கு தெரியப்படுத்தக்கூடும் இதுவே சரஹாவின் ராஜதந்திரம். ஆனால் சரஹா ஆப்பின் மூலம் மிரட்டல் வருவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து அண்மையில் சரஹா கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது. 

இந்நிலையில் சரஹா போன்று தற்போது “ட்ரிக்கி சாட்” (tricky chat) என்ற மொட்ட கடிதாசி ஆப் புதிய அவதாரம் எடுத்துள்ளது. நம்மை பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள்? நமக்கான நேர்மறை, எதிர்மறை விமர்சனங்களை நாம் அறிந்து கொள்ளுவதற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உருவாக்கப்பட்டது. ஃபன் மற்றும் ஜாலிக்காக உருவாக்கப்பட்ட இந்த  ட்ரிக்கி சாட்டை கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

ட்ரிக்கி சாட் ஆப்பை பதிவிறக்கம் செய்தவுடன் அதனுள் சென்று நம் பெயர், மின்னஞ்சல், பாஸ்வேர்டு, யூசர் நேம் போன்ற விவரங்களைக் கொடுத்து பதிவு செய்தால் நமக்கான யூஆர்எல் ஐடி கிடைக்கும். அதனை நம் சமூக வலைதளமான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் பதிவு செய்யும்போது நமக்கான விமர்சனங்ககள் ட்ரிக்கி சாட் இன்பாக்ஸிற்கு வரும். ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்ட் இயங்குதளங்களில் “ட்ரிக்கி சாட்” ஆப்பை பயன்படுத்தி கொள்ளலாம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close