மாதவிடாயை கண்காணிக்கும் ஃபிட்பிட் இந்தியாவில் அறிமுகம்!- சிறப்புகள் என்னென்ன?

  PADMA PRIYA   | Last Modified : 14 Mar, 2018 10:17 pm

பெண்களின் மாதவிடாய் உட்பட பல்வேறு வகையில் உதவக் கூடிய வகையிலான வாட்ச்சை இந்தியாவில் ஃபிட்பிட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையில் முதலிடத்தில் இருக்க பல புதிய உத்திகள் கையாளப்படுகிறது.

அந்த வகையில், ஃபிட்பிட் ஏற்கெனவே இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பெண்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சில மாற்றங்களோடு ஃபிட்பிட் வேர்ஸா வாட்ச்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதனை செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது ஃபிட்பிட் நிறுவனம். இவை அடுத்த மூன்று மாதத்தில் ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா, ஹெலியோஸ் மற்றும் ஃப்லிப்கார்ட், அமேசான் போன்ற அனைத்து விற்பனையகங்களிலும் கிடைக்கபெறும்.

இந்தியாவில் இதன் விலை ரூ. 19,999. சிறப்பு எடிஷனின் விலை ரூ. 21,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள்: *24X7 இதயத் துடிப்பை கணிகாணிக்க முடியும் * வாட்ச் திரையிலேயே உடற்பயிற்சி முறைகளை காணலாம் * மாதவிடாயையும் முன்னறிவிக்கும் * தூக்கத்தையும் கண்காணிக்கலாம் * உடல் ஆரோகியம் மற்றும் உபாதைகளுக்கான தீர்வுகள் குறித்த தரவுகளை தினசரி உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனிலும் பெறலாம் * பாடல்களைக் கேட்கலாம் * 4 நாட்களுக்கு நீடிக்கக் கூடிய பேட்டரி.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.