ஃபிஃபா ரசிகர்களுக்கு உறுதுணையாக இருக்கும் கூகிள் ட்ரான்ஸ்லேட்டர்!

  திஷா   | Last Modified : 09 Jul, 2018 05:03 pm

google-translator-helps-out-for-fifa-fans

கடந்த சில நாட்களாக ஃபிஃபா காய்ச்சலில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்த உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகிறது. பல நாடுகளில் இருந்து இதற்காக ரஷ்யா வந்திருக்கிறார்கள் ரசிகர்கள். 

விளையாட்டை ரசிப்பதற்கு மொழி தேவையில்லை ஆனால் வேறு நாட்டில் நமது தேவைகளைப் பூர்த்தி செய்ய மொழி அவசியம் தானே? இதற்காக பலரும் கூகுள் டிரான்ஸ்லேட்டரை பயன்படுத்துவது தற்போது தெரிய வந்துள்ளது. 

இங்குள்ள யுரேசியா பகுதிகளில் பயன்படுத்தப்படும் சிரிலிக் எழுத்துக்களை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. எனவே, கூகுள் டிராஸ்லேட்டர் மூலம் ரஷ்ய மக்கள் பேசுவதை புரிந்து கொள்கிறோம் என்கிறார் பிரேசிலில் இருந்து 12,000 கிலோமீட்டர்களுக்கு மேல் பயணித்து வந்திருந்த ரசிகர். 

துல்லியமான மொழி பெயர்ப்பை கூகுள் டிரான்ஸ்லேட்டர் செய்வதில்லை என்றாலும், தகவல் பரிமாற்றத்திற்கு பெரிதும் பயன்படுவதை மறுக்க முடியாது. அதோடு, ஃபிஃபா உலக கோப்பை போட்டிகளை பற்றி செய்தி திரட்ட வந்த பத்திரிக்கையாளர்களுக்கும் இந்த கூகுள் டிரான்ஸ்லேட்டர் பெரிதும் பயன்படுகிறது.

ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த நட்சத்திர வீரர் அந்தோனி கிரேய்ஸ்மான் உடனான பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த செய்தியாளர் கேள்வி கேட்க விரும்பினர். பிரஞ்சு மொழியில் மட்டுமே கேள்விகள் கேட்க வேண்டும் என்று அணி நிர்வாகம் கூறியதால், டிரான்ஸ்லேட்டரில் மொழி பெயர்ப்பு செய்து, செய்தியாளர் கேள்விகளைக் கேட்டது இதில் குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close