இனி எல்லோருக்கும் ஃபார்வேர்டு மெசேஜ் அனுப்ப முடியாது: வாட்ஸ்ஆப் முடிவு

  Newstm News Desk   | Last Modified : 20 Jul, 2018 03:02 pm

whatsapp-to-scrap-quick-forwarding-option

வாட்ஸ்ஆப்பில் ஃபார்வேர்டு மெசேஜ்கள் அனுப்புவதில் வாட்ஸ்ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவர உள்ளதாக அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வாட்ஸ்ஆப்பில் இருந்து பரவும் வதந்திகளால் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் 10க்கும் மேற்பட்ட உயிர்களும் பறிபோய் உள்ளன. 

எனவே வாட்ஸ்ஆப்பில் பரவும் வதந்திகளை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அந்நிறுவனத்தை வலியுறுத்தி கடிதம் எழுதி இருந்தது. இதுகுறித்து வாட்ஸ்ஆப் தரப்பில் இருந்து இன்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "இந்தியாவை பொறுத்தவரை 20 கோடி மக்கள் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். உலகளவில் இந்தியா தான் அதிகமான புகைப்படங்கள், செய்திகள் என அனைத்தையும் பகிர்ந்துக்கொண்டு இருக்கின்றனர். 

இந்த ஃபார்வேர்டு செய்தியால் ஏற்படும் பல்வேறு குழப்பங்களையும் சிக்கல்களையும் தீர்க்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறோம். அதன்படி ஒருவர் தனது வாட்ஸ்ஆப் செயலி மூலம் புகைப்படங்கள், செய்திகள், வீடியோக்கள் போன்றவற்றை 5 முறைக்கு மேல் ஃபார்வேர்டு செய்ய முடியாது. 5 முறை முடிந்துவிட்டால், தானாகவே ஃபார்வேர்டு பட்டன் அழிந்துவிடும் தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டு, அது சோதனையில் இருக்கிறது. அதை விரைவில் இந்தியாவில் நடைமுறைப்படுத்த இருக்கிறோம். 

வாட்ஸ்ஆப் என்பது தனிப்பட்டவர்கள் தங்களுக்கு நெருங்கியவர்களுடன் சாட் செய்வதற்கு உருவாக்கப்பட்ட ஒரு செயலி. வாட்ஸ்ஆப்பில் பாதுகாப்பையும், தனிநபர் சுதந்திரத்தையும் பாதுகாக்க கடமைப்பட்டு இருக்கிறோம்" என தெரிவித்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close