சூரியபகவானை குஷிப்படுத்த கிடைத்திருக்கும் அறிய வாய்ப்பு ‘கிரகணம்’

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Aug, 2018 06:09 pm

please-do-these-kind-of-works-in-solar-eclips

இந்த சூரிய கிரணம் தமிழகத்தில், இந்தியாவில் தெரியாது என்பதால், எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், கிரகணம் தெரியும் பகுதியில் உள்ளவர்கள் சிலவற்றைப் பின்பற்ற வேண்டும். கிரகணம் தெரியவில்லை என்றாலும், கிரகணம் தினத்தன்று பூஜை, மந்திரங்கள் செய்யலாம். இதனால், கூடுதல் பலன் கிடைக்கும். அவற்றைப் பற்றி தெரிந்துகொள்வோம். 

* சூரிய கிரகணத்தை பார்க்க நினைப்பவர்கள், வெறும் கண்ணில் பார்க்காமல் அதற்காக தயாரிக்கப்படும் கண் கண்ணாடிகளை கொண்டு பார்க்க வேண்டும். 

* சூரிய கிரகணத்தில் அதிக கதிர்வீச்சு ஏற்படும் என்பதால் சமைத்த உணவுகளில் தர்ப்பை புல்லினைப் போட்டு வைக்கலாம்.

* புண்ணிய நதிகளுக்கு சென்று குளித்துவிட்டு தானம் செய்தால் புண்ணியம் என பெரியவர்கள் சொல்கிறார்கள்

* காவிரி ஆற்றுக்கோ அல்லது நதிகளுக்கோ சென்று முன்னோர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தர்பனம் செய்யலாம்.

* வீட்டில் உள்ள பூஜை அறையில் தெய்வ சிந்தனையுடன் சாமி கும்பிடலாம். 

* இவையெல்லாம் செய்யமுடியவில்லை எனில் நமது செல்போனில் சுப்ரபாதம், விநாயகர் துதி ஆகிய பாடல்களை கேட்கலாம், ஆர்வமிருந்தால் பாடலாம்

* கிரணகத்துக்கு முன்பு முன்பும், பின்பும் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். 

* கிரகணம் முடிந்ததும் குளித்துவிட்டு பூஜை செய்தால் சூரிய பகவான் ஏற்றுக்கொள்வார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close