சூரிய கிரகணம் பறவை மற்றும் விலங்குகளுக்கு ‘ஃபீல்ட் டே’... ஏன்?

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Aug, 2018 03:19 pm
the-eclipse-s-effects-on-animals-will-be-wild

சூரிய கிரகணம் மனிதர்களுக்கு மட்டுமல்ல ஆடிப்பாடி, சுற்றித்திரியும் விலங்களுக்கும் கருப்பு நாளாகவே உள்ளது. பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என அனைத்துமே சூரியகிரகணத்தின் போது மிகுந்த பயத்தில் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மிருகங்கள் மற்றும் பறவைகளுக்கு சூரிய கிரகணம் ‘ஃபீல்ட் டே’ (புலம்பும் தினம்)  என கூறுகின்றனர். 

2001 ஆம் ஆண்டு வானியலாளர் பவுல் மூர்டின் மேற்கொண்ட ஆராய்ச்சிப்படி கிரகணத்தின்போது கொசுக்கள், சிறிய பூச்சிகள், எறும்பு, ஈ, வண்டு, மீன் மற்றும் சில ஊர்வன இரவு வந்துவிட்டதாக எண்ணி அவை இரவில் செய்ய வேண்டிய வேலைகளை செய்திருக்கின்றன. இப்படி பூச்சி இனங்களில் இருந்து இந்த தடுமாற்றம் தொடங்குகிறது.  இதையடுத்து ஜிம்பாவே நாட்டில் நடத்திய ஆய்வின் படி நீர்யானைகள் பயத்தில் ஆற்றுக்குள் மூழ்கியே இருந்ததாகவும் கிரகணம் விட்டப்பிறகுதான் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 

இதேபோல் பறவைகள் சூரியகிரகணத்தின்போது என்ன செய்யும்? என்ற கேள்வி மனதில் எழும். தினமும் ஆடிப்பாடி காற்றில் இசைப்பாடும் பறவைகள் கிரகணத்தின் அன்று வாயே திறக்காமல் மிரண்டு காணப்படுமாம். புறா வகைகள் மிகுந்த கோபத்தில் உருமிக்கொண்டிருக்கும் என்றும், எப்போதும் இருட்டில் ஆக்டிவாக இருக்கும் வெளவால் சூரிய கிரகணத்தின்போது உணவு தேடாமல் சோர்வாகவும், மரத்தைவிட்டு வெளியே வராமல் செயலலிழந்தும் காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோழிகள் அதிகமாக சத்தமிட்டப்படி அங்கும் இங்கும் பறந்தபடி இருக்கும் என்று இங்கிலாந்தில் நடைபெற்ற பாஸ்டன் சொசைட்டி ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி என்ற ஆய்வில் கண்டறியப்பட்டது.  

இந்த சூரிய கிரகணத்தில் மேற்கண்ட உயிரிகளை பார்த்தால் இப்படியெல்லாம் செய்கின்றனவா? என்பதை கவனியுங்கள்! 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close