வாட்ஸ்ஆப் அப்டேட்: மெசேஜை ஓபன் பண்ணாமல் ஃபோட்டோவை பார்க்கலாம்!

  Newstm Desk   | Last Modified : 25 Sep, 2018 03:21 pm
whatsapp-testing-messagingstyle-inline-image-style-for-notifications

வாட்ஸ்ஆப்பில் மெசேஜை ஓபன் பண்ணாமல் ஒருவர் அனுப்பிய ஃபோட்டோவை பார்க்கும் வசதி வர உள்ளதாக தெரிகிறது. 

ஒருவர் அனுப்பும் வாட்ஸ்ஆப் மெசேஜை நோட்டிஃபிகேஷன்களில் என்ன என்று பார்த்துவிடலாம். ஆனால், ஒருவர் புகைப்படம் அனுப்பி இருந்தால், அது என்ன என்பதை பார்க்க மெசேஜை திறக்க வேண்டும். இதனை மாற்றும் வகையில் வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்களை டெஸ்ட் செய்து வருகிறது. இன்லைனர் இமேஜஸ் என்று கூறப்படும் இந்த வசதி முன்பே இருக்கிறது. எனினும், தற்போது சோதனையில் உள்ள அப்டேட்டில் நோட்டிஃபிகேஷனிலேயே அந்த படத்தை பெரிதாக்கி பார்க்க முடியும். 

இந்த சோதனை அப்டேட் 'ஆண்ட்ராய்டு 9 பை' சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். மெசேஜ் ஸ்டைலிலும் மாற்றங்கள் கொண்டு வர வாட்ஸ்ஆப் முடிவு செய்துள்ளது. மேலும், வீடியோ அல்லது ஜிஃபை பொறுத்தவரை, அவற்றின் ஐகான்கள் மட்டுமே நோட்டிஃபிகேஷனில் தெரியும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close