பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் உலகெங்கிலும் பரவலாக முடங்கியது. இதனால் பயனாளிகள் மற்ற சமூக வலைதளங்களில் #instagramdown என்ற ஹேஷ்டேக் மூலம் இது குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
உலகளவில் பல்வேறு நாடுகளில் இன்று இன்ஸ்டாகிரம் சிறிது நேரம் வேலை செய்யவில்லை. உள்ளீடு செய்வதில், வீடியோ பதிவேற்றம், புகைப்படத்தை பகிர்வதில் பயனாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா என பிரதானமாக இன்ஸ்லாகிராம் பயனாளர்கள் இருக்கும் நாடுகளில் பிரச்னை இருந்ததாக தெரிகிறது.
இதனால் அசவுகரியம் அடைந்த பயனாளர்கள் மற்ற தளங்களான ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் மற்றவர்களுக்கும் பிரச்னை இருக்கிறதா? என வினவ ஆரம்பித்தனர். இதனால் இன்ஸ்டாகிரமை கலாய்ந்த்து மீம்ஸ்களும் குவியத் தொடங்கின.
''நான் இன்று சாப்பிட்டதை எவ்வாறு இந்த உஇலக்குக்கு தெரியப்படுத்துவேன்?'' என்பது போன்ற தொனியிலும் கலாய்ப்பு பதிவுகளை நெட்டிசங்கள் உதிர்த்தனர். இதனால் #instagramdown என்ற ஹெஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது.
Instagram's back people. No more career threats to Insta models and Tiktok artists. #InstagramDown
— abhishek satam (@Made_In_Bombay) October 3, 2018
அதே போல, பல பயனாளிகளால் தங்கள் நட்பு வட்டத்தில் இருக்கும் மக்களின் ஃபுரோபைல்களை பார்க்க இயலவில்லை.
நியூஸ்ஃபீட், லாகின் என பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்ததாக பயனாளர்கள் ட்விட்டரில் குறிப்பிட்டனர். செப்டம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வடக்கு அமெரிக்க பயனாளிகளின் சொந்த தகவல்கள் அனைத்தும் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், மற்றும் ட்விட்டர் மூலமாக லீக்கானது. இவ்வாறு லிக்காகும் சூழல்களில் இந்தத் தளங்களில் முடக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.