மனஅழுத்தத்தை கண்டுபிடிக்கும் நவீன நாற்காலி: ஜப்பான் கண்காட்சி

  Newstm Desk   | Last Modified : 19 Oct, 2018 05:50 am
japan-tech-expo-brings-smell-and-stress-sensors

ஜப்பானில் நடைபெற்ற அதிநவீன தொழில்நுட்ப கருவிகளுக்கான கண்காட்சியில், ஒருவரின் உடல் குறியீடுகளை வைத்து, அவர் மன அழுத்தத்தில் உள்ளாரா, என்பதை கண்டுபிடித்துவிடும் சென்சார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், அதிநவீன தொழில்நுட்ப கருவிகளுக்கான கண்காட்சி சமீபத்தில் நடைபெற்றது. ஆசியாவில் உள்ள உச்சகட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில், கண்களை கவரும் பல்வேறு வித்தியாசமான படைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 

ஒருவர் எந்த அளவு மன அழுத்தத்துடன் உள்ளார் என்பதை கண்காணிக்கும் நவீன நாற்காலி ஒன்றை பானசானிக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நாற்காலியில் அமரும்போது, நாடித்துடிப்பு, கைகளில் உள்ள வேர்வை, கேமரா மூலம் முகத்தின் பாவனைகளை பதிவு செய்தல்  போன்றவற்றால் ஒருவர் எந்த அளவுக்கு மன அழுத்தத்துடன் உள்ளார் என்பதை தெரிந்து கொள்ள முடியுமாம். இந்த நாற்காலியை, விமானத்தில் பயன்படுத்தினால், விமானிகள் மனஅழுத்தத்துடன் உள்ளனரா என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்கின்றனர். இதையே, தங்களது ஊழியர்கள் சரியாக வேலை செய்கிறார்களா அல்லது, மன அழுத்தத்தில் உள்ளார்களா என்பதை தெரிந்துகொள்ள தனியார் நிறுவனங்கள் வருங்காலத்தில் பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. 

மேலும், மொபைல் கேமராவை வைத்தே, பல் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் உண்டா என்பதை தெரிந்து கொள்ளும் புதிய சென்சார்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நமது ஸ்மார்ட்போன் கேமராவை பார்த்து சிரித்தால் போதும். அதை வைத்து, பிரத்யேக சென்சார்கள் மூலம், பற்களின் பிரச்னைகளை தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற மருத்துவ ஆலோசனை கொடுக்கிறது இந்த கருவி. ஜப்பானில், 65 வயதிற்கு அதிகமானோர் சுமார் 28% மக்கள் உள்ள நிலையில், இந்த கருவிக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், உடல் மணத்தை தெரிந்து கொள்ளும் சென்சார்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. அதிக மன அழுத்தத்தில் உள்ள ஒருவருக்கு வியர்த்தால், அதிலிருந்து வெங்காய வாடை வரும் என்றும் கூறப்படுகிறது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close